பெண்கள் மட்டும்தான் சருமத்தை அழகாக மற்றும் நல்ல பராமரிப்போடு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆண்களும் அவர்களது சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டும். ஆனால் என்ன? வேலைக்காக வெளியில் பயணம் செய்வது போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களின் சருமத்தைப் பாதுகாப்பதில் தோல்வியைச் சந்திக்கின்றனர். பெண்களை விட அதிக நேரம் வெளியில் இருப்பதால் அழுக்கு, தூசி, தோல் வெடிப்பு போன்ற பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
சருமத்திற்கு பேஸ் வாஷ் : சரும பராமரிப்பு என்ற வார்த்தையைக் கேட்டதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பேஸ் வாஷ்தான். அதிலும் பல்வேறு பணிகளுக்காக வெயிலிலேயே பயணிக்கும் ஆண்கள் நிச்சயம் தவறாமல் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் சருமத்தை பேஸ் வாஷ்கள் கொண்டு கழுவிக்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்களை விட ஆண்களின் சருமம் அதிக எண்ணெய் பிசுபிசு அதிகம் இருப்பதால் கிளென்சரைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் வைட்டமின்கள் நிறைந்த பேஸ்வாஷ்களை நீங்கள் உபயோகிக்கலாம்.
சன்ஸ்கிரீன் உபயோகித்தல் : ஆண்கள் அதிக நேரம் வெயிலில் பயணிக்கும் சூழல் நிலவும் என்பதால், நீங்கள் எப்போதும் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீன் உபயோகிக்க மறந்துவிடாதீர்கள். சன்ஸ்கிரீன் உங்கள் சருமத்தை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பதோடு, சூரியன் கதிர்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கிறது. உங்களது ஸ்கின், எண்ணெய் பசையாக இருந்தாலும், உலர்ந்ததாக இருந்தாலும் அல்லது உணர்திறன் உடையதாக இருந்தாலும் சரி... நீங்கள் வெளியில் அதிக நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒருமுறை மீண்டும் சன்ஸ்கிரீனை நீங்கள் உபயோகிக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல் : எண்ணெய் பலகாரங்கள், பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகள் அதிகம் நீங்கள் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, முகப்பரு மற்றும் பிற தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஆண்கள் தேவையில்லாத உணவுகளைச் சாப்பிடுவதை விட சமச்சீர் உணவு, வைட்டமின்கள் நிறைந்த, பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் சாப்பிட வேண்டும். இதன் மூலமும் உங்களது சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளலாம்.
வறண்ட தோல் சருமத்தைப் பராமரிக்க : எக்ஸ்ஃபோலியண்ட்களைப் பயன்படுத்துவது முக்கியம். இதோடு மாய்ஸ்சரைசரையும் நீங்கள் உபயோகிக்கலாம். எனவே ஆண்கள் பிஸியான பணியில் இருந்தாலும், இது போன்ற சில விஷயங்களை நீங்கள் சுலபமாக மேற்கொள்ளலாம். இதன் மூலம் உங்களது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீங்கள் சரிசெய்துவிட முடியும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.