முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

Use of Skincare Sheet Mask : ஷீட் மாஸ்க் முகத்தின் சரும பாரமரிப்புக்கு முக்கியமாக விளங்குகிறது. எளிமையாக குறைந்த நேரத்தில் முகப் பொலிவை ஷீட் மாஸ் மூலம் பெறமுடியும்.

 • 17

  கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

  அழகு துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஷீட் மாஸ்க் ஒரு சிறந்த கொரிய சரும பராமரிப்பு முறையாகும். ஷீட் மாஸ்க் என்பது சருமத்தில் இருக்கும் செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சீரம் கொண்ட ஒரு பேப்பர் ஆகும். இது ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் பேக் போன்றவற்றை விட எளிமையான பராமரிப்பு. இந்த ஷீட் மாஸ்க் பல வகைகளில் மார்க்கெட்டில் கிடைக்கிறது. உங்கள் சருமத்தின் பராமரிப்பை மிக எளிதாக்கி, உங்களின் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

  கொரியன் ஷீட் மாஸ்க் சருமத்தில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும். மேலும் கொரியல் ஷீட் மாஸ்க் முகத்தில் உள்ள சோர்வை நீக்குவதோடு, கருமையான தழும்புகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றையும் குறைக்கும். இந்த ஷீட் மாஸ்க்கில் உள்ள அத்தியாவசியமான உட்பொருட்கள் மற்றும் அழக்குகளை வெளியேற்றும் பண்புகள், சருமத்தை சுத்தமாகவும், பொலிவாகவும் காட்டும்.

  MORE
  GALLERIES

 • 37

  கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

  கார்னியர், ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் மற்றும் நைக்கா போன்ற இந்திய நிறுவனங்கள் ஷீட் மாஸ்க்குகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களாக உள்ளன. இவற்றை பலமுறை பயன்படுத்தியும் அதன் நன்மைகளை உங்கள் சருமம் பெறவில்லை என்றால், அது நீங்கள் பயன்படுத்தும் முறைகளில் ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். ஷீட் மாஸ்க் பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

  செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை: ஷீட் மாஸ்க்கை அணியும் முன் உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். எப்போதும் நீங்கள் மற்ற மாஸ்க் போடும் போது முகம் கழுவுவதை போல்தான் இதற்கும் செய்ய வேண்டும். இதனால், உங்கள் முகத்தில் மாசுகளை நீக்கப்படும். முகத்தை கழுவாமல், முகத்தில் இருக்கும் அழுக்கின் மேல் எந்த மாஸ்க்காக இருந்தாலும் திறம்பட வேலை செய்வது கடினம் தான்.

  MORE
  GALLERIES

 • 57

  கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

  அதிக நேரம் ஷீட் மாஸ்க் அணிந்திருந்தால் பலன்களை அதிகமாக பெற முடியும் என்று நினைப்பது தவறு. இதை நீங்கள் 10 முதல் 20 நிமிடம் மட்டுமே வைக்க வேண்டும். அதற்கு மேல் வைத்தால் உங்கள் சருமம் வறண்டு அதன் முழு பலன்கள் கிடைக்காமல் போகலாம். அதுமட்டும் இல்லாமல் உங்கள் சருமத்தில் இருக்கும் ஈர தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்களையும் அது உறிஞ்சி விடும்.

  MORE
  GALLERIES

 • 67

  கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

  எந்த ஷீட் மாஸ்க்காக இருந்தாலும் அதில் இருக்கும் நன்மைகளை சருமம் உள்வாங்கிக்கொள்ள சிறிது நேரம் ஆகும். எனவே உங்கள் முகத்தில் மாஸ்கை பயன்படுத்திய உடன், ஒரு மென்மையான துண்டில் மெதுவாக துடைத்து எடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 77

  கொரிய ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? கிளாஸி லுக் ரகசியம்

  உங்கள் சருமத்தை மெருகூட்ட சரியான ஷீட் மாஸ்கை பயன்படுத்துவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஷீட் மாஸ்க் தயாரிக்க பயன்படுத்தும் சீரம் தங்கள் சருமத்திற்குத் தேவையான சரியான பொருட்களை கொண்டு செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES