முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

கோடையில் நிலவும் அதீத வெப்பத்தால் இயல்பாகவே சருமத்தில் நீர்ச்சத்து குறையும். அடிக்கின்ற வெயிலுக்கு வியர்த்து கொட்டும் என்பதால் பலரும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள்.

  • 19

    இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

    மாறி கொண்டே வரும் கிளைமேட்டுக்கு மத்தியில் புதிய ஸ்கின் ஸ்களை தொடர்வது என்பது கடினமாகிறது. ஆரோக்கியமான சருமத்துடன் புதிய க்கு ஏற்றவாறு தங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தை தொடர்வது சிலருக்கு எளிதானதாக இருக்கிறது. என்றாலும் பலருக்கு சீசன் மாறுவதால் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுக்க அல்லது தவிர்க்க நிறைய முயற்சி எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 29

    இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

    அதிலும் தற்போது நிலவி வரும் சம்மர் சீசன் என்பது அதிக வியர்வை வெளியேறுவது, டிஹைரேஷன் மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் ரேஷஸ், சன்பர்ன், சூட்டுக்கட்டி, முகப்பரு, மெலஸ்மா, டேனிங் மற்றும் ஸ்கின் அலர்ஜி உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியது.

    MORE
    GALLERIES

  • 39

    இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

    எனவே இப்போது இருக்கும் இந்த ஹாட் மாதங்களில் நாம் நம்முடைய சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு வழங்குவது மிகவும் முக்கியம். வெயில் வாட்டி வதைக்கும் இந்த கோடை காலத்தில் உங்கள் சருமத்தை பளபளப்பாக மற்றும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க புதிய மற்றும் எளிதான டிப்ஸ்களை நீங்கள் தேடுகிறீர்களானால், பயனுள்ள உதவி குறிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 49

    இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

    ஜென்ட்டிலான க்ளென்சரைப் பயன்படுத்துங்கள் : எந்த சீசனிலும் சரும பராமரிப்பின் முதன்மையான மற்றும் அடிப்படையான விஷயம் என்பது க்ளென்சிங் (cleansing) செய்வதை உள்ளடக்கியது. கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக அடிக்கடி அதிகம் வியர்வை வெளியேறும் என்பதால் முகத்தில் உள்ள போர்ஸ்கள் அடைப்பட்டு முகப்பருக்கள் அல்லது கட்டிகள் உருவாகலாம். எனவே உங்கள் ஸ்கின் டைப்பிற்கு ஏற்ப உங்கள் க்ளென்சரை தேர்ந்தெடுங்கள். அது உங்கள் சருமம் சுவாசிக்கவும், புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உங்களுக்கு உதவும்.

    MORE
    GALLERIES

  • 59

    இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

    சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள் : வெயிலில் வெளியே செல்லும் போது சூரியனின் புற ஊதா கதிர்கள் நம்முடைய சருமத்திற்கு சேதம், சுருக்கங்கள் மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். கிளைமேட் மேகமூட்டமாக இருந்தாலும் கூட சூரியனில் இருந்து வெளிப்படும் UV rays சருமத்தை பாதிக்கின்றன. எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 30 SPF கொண்ட ப்ராட்-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். மேலும் ஒவ்வொரு 2 - 3 மணிநேரத்திற்கு ஒருமுறை சருமத்தில் சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 69

    இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

    ஹைட்ரேட்டாக இருங்கள் : உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க நிறைய தண்ணீர் மற்றும் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 3 1/2 லிட்டர் அல்லது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்களையும், உங்கள் சருமத்தையும் நீர்ச்சத்தோடு வைத்திருக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

    எக்ஸ்ஃபோலியேட் : சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை அகற்ற மற்றும் போர்ஸ்கள் அடைப்படுவதை தடுக்க எக்ஸ்ஃபோலியேஷன் உதவுகிறது. உங்கள் சருமம் மிருதுவாக மற்றும் ஆரோக்கியமாக இருக்க குறைந்தப்பட்சம் வாரம் ஒருமுறை ஜென்ட்டிலான எக்ஸ்ஃபோலியேட்டிங் ஸ்க்ரப்-ஐ பயன்படுத்தவும். எனினும் உங்கள் சருமத்தை அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்யாமல் பார்த்து கொள்வது அவசியம்.

    MORE
    GALLERIES

  • 89

    இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

    மாய்ஸ்ட்ரைஸ் : கோடையில் நிலவும் அதீத வெப்பத்தால் இயல்பாகவே சருமத்தில் நீர்ச்சத்து குறையும். அடிக்கின்ற வெயிலுக்கு வியர்த்து கொட்டும் என்பதால் பலரும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். எனினும் கோடைகாலத்தில் உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க லைட்வெயிட் மற்றும் ஆயில்-ஃப்ரீ மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    இந்த சம்மரில் உங்க சருமம் எப்போதும் ஃபிரஷாவே இருக்கனுமா..? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

    க்ளே மாஸ்க் பயன்படுத்தலாம்... உங்கள் சருமம் எண்ணெய்பசை மிக்க சருமம் என்றால் கோடைகால சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட க்ளே மாஸ்க்கை உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும். போர்ஸ் அடைக்கப்படுவது மற்றும் முகப்பருவை தடுக்க க்ளே மாஸ்க் உதவுகிறது. சருமத்தில் உள்ள அசுத்தங்களை திறம்பட குறைத்து சருமத்தை சுத்தமாக்குவதோடு, சருமத்தில் எண்ணெய் குவிவதை கட்டுப்படுத்துகிறது.

    MORE
    GALLERIES