சன்ஸ்கிரீன் : சன் ஸ்கிரீன் சூரியக் கதிர்களை நேரடியாகச் சருமத்தில் அண்ட விடாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் காற்று மாசுபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் இது உதவுகிறது. அதனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ப SPF தேர்வு செய்து வாங்குங்கள்.வெயிலில் வியர்வையால் சன்ஸ்கிரீன் கலைந்து விட்டாலோ ரெஃப்ரெஷிற்காக முகம் கழுவியிருந்தாலோ சன்ஸ்கிரீன் அழியும் பட்சத்தில் மீண்டும் அப்ளை செய்ய எப்போதும் உடன் வைத்துக் கொள்ளுங்கள்.
வைப்ஸ் : வைப்ஸ் க்ளென்ஸிங் போன்றது. அதே சமயம் சருமத்தை வறட்சி அடையச் செய்யாமல் ஹைட்ரேட்டாக வைத்துக் கொள்ளும். சோர்வாக உணர்ந்தால், மாசுகளால் ஏற்பட்ட தூசிகளை அகற்ற ஈரமாக இருக்கக் கூடிய வைப்ஸை எடுத்து முகம் முழுவதும் துடைத்துக் கொண்டால் முகம் புத்துணர்ச்சி அடையும். தற்போது அவை பல வாசனைகளைக் கொண்டும் வருகின்றன.