சமீபத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் ஃபிட்டாக மட்டுமல்லாமல் மிக இளமையாகவும், ஆரோக்கியமாகவும் காட்சியளிக்கிறார். அது மட்டுமல்லாமல் மேக்அப் இல்லாமல் கூட இவரது சருமம் பட்டு போன்ற ஜொலிக்கிறது. உங்களுக்கும் ஆரோக்கியமான சருமம் வேண்டுமென்றால் இதையெல்லாம் பண்ணவே வேண்டாம் என்று தீபிகா சமீபத்தில் தெரிவித்துள்ளார். தீபிகாவும் சரும ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி பகிர்ந்துள்ளார்.
* முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வெந்நீர் பயன்படுத்தினால், சரும வறட்சி அடையும் மற்றும் ஈரப்பதம் குறையும்.
* ஐஸ் கியூப்களை துணியில் சுற்றி முகத்தில் அப்ளை செய்யலாம். இது உடனடி புத்துணர்ச்சியைத் தரும்.
* சருமம் நன்றாக காய்ந்த பிறகு, மாயிஸ்ச்சரைசரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்ய வேண்டும். தீபிகா அஸ்வகந்தா பவுன்ஸ் ரிஜுவினேட்டிங் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
* வெயில், வெளியில் செல்லும் வேலை இருக்கிறது, அப்போது மட்டும் தான் சூரிய ஒளியில் யூவி கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையவே கிடையாது. எல்லா காலத்திலுமே, குளிர்காலமாக இருந்தாலும் சரி கோடை காலமாக இருந்தாலும் சரி, சன்ஸ்க்ரீனை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.
* தீபிகா பட்சௌலி சன் ஸ்க்ரீன் என்ற தயாரிப்பை பயன்படுத்துகிறார். இதில் SPF 40+ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சில காலத்திற்கு முன்பு, 82°E என்ற தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்டை தீபிகா அறிமுகம் செய்திருக்கிறார். தன்னைத் தானே பார்த்துக் கொள்வது என்பது ஆரோக்கியமான உணவு, பர்சனல் கேர், ஸ்கின்கேர் என்று எல்லாவற்றையும் கொண்டிருக்கும். செல்ஃப் கேர் என்றும் வரும் போது, அதை சுலபமாகவும், மகிழ்ச்சியானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றுவதற்கு இந்த பிராண்டின் மூலம் முயற்சி செய்கிறேன் என்பதை அவர் தெரிவித்திருக்கிறார்.
உடல் ஆரோக்கியம், ஃபிட்னஸ், சரும பராமரிப்பு, ஃபேஷன் மன ஆரோக்கியம் என்று பல இடங்களில் தீபிகா படுகோன் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே தொழில் முனைவோராகவும் வெற்றி பெற்ற தீபிகா படுகோன், அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் பதான் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஹிந்தி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக பிரபாஸ் உடன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.