கால்களில் உள்ள முடிகளை நீக்கும் போது துவாரங்கள் அடைபடுவதால், வளர முடியாத முடிகள் மற்றும் ரேசர் காயங்கள் இவற்றால் ஏற்படுகிறது. அரோமாதெரபிஸ்ட் மற்றும் அழகு சாதன நிபுணரும் இனத்தூரின் நிறுவனருமான பூஜா நாக்தேவ் இதுகுறித்து கூறுகையில், தோலின் மேல் அடுக்கு பல்வேறு காரணங்களுக்காக தோன்றினாலும், துளைகள் கருப்பு நிறமாகவும், ஸ்ட்ராபெர்ரிகளில் விதைகள் போலவும் தோன்றினால், நீங்கள் ஸ்ட்ராபெரி ஸ்கின் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்” என்கிறார்.
இது தீவிரமான பிரச்சனை கிடையாது. வளர்ந்த முடி மற்றும் திறந்த துளைகள் காரணமாக கருப்பு புள்ளிகள் தோன்றும். உங்கள் துளைகள் எண்ணெய் மற்றும் அழுக்குகளால் அடைக்கப்படும் போது, சருமத்தில் ஸ்ட்ராபெரி ஸ்கின் உருவாகும். இந்த துளைகள் காற்றில் வெளிப்படும், மேலும் ஷேவ் செய்த பிறகு, காற்றில் உள்ள எந்த அழுக்குகளும் துளைகளை கருப்பு நிறமாக மாற்றும். இந்த கரும்புள்ளிகள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும் நல்ல நிறமான சருமத்தின் அழகை கெடுக்கும். இதனாலவே வெளியவே கால்களை காட்ட சிலர் தயங்குவார்கள்.ஸ்டராபெரி ஸ்கின் பிரச்சனையை சரி செய்வதற்கான சில குறிப்புகளை கீழே கொடுத்துள்ளோம்..
மாய்ஸ்சுரைஸர்:
ஸ்ட்ராபெரி ஸ்கின் வறட்சியை உருவாக்க கூடியது. எனவே குளித்த உடனேயே சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதற்காக அதனை மாய்சுரைஸ் செய்யலாம். குளிர்ந்த கிரீம் லோஷன் அல்லது வெண்ணெயைக் கொண்டு மெதுவாக மசாஜ் செய்யுங்கள், ஏனெனில் இது சருமத்தை ஈரப்பதமாக்கும். நீங்கள் ஸ்ட்ராபெரி ஸ்கின் பிரச்சனையில் இருந்து விடுபட விரும்பினால், குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்.
முறையான ஷேவிங்:
கால்களை ஷேவ் செய்யும் விதம் முக்கியமானது. பிசியான வாழ்க்கை முறை காரணமாக, விரைவில் ஷேவ் செய்யக்கூடிய மிகவும் கடுமையான ரேஸர்கள் அல்லது உபகரணங்களைக் கொண்டு கால்களில் உள்ள முடிகளை அகற்றுகிறார்கள். இதனால் வறட்சி மற்றும் சென்சிட்டிவ் ஸ்கின் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மாய்ஸ்சரைசிங் ஷேவிங் க்ரீமைத் தேர்ந்தெடுத்து, சோப்பு மற்றும் தண்ணீரால் உங்கள் ஷேவ் செய்ய உள்ள இடத்தை கழுவிய பிறகு அதைப் பயன்படுத்தவும். இது உங்கள் சருமத்தில் மென்மையாக இருக்கும் மற்றும் வறட்சியை ஏற்படுத்தாது.
* எபிலேட்டரைப் பயன்படுத்துதல்:
ஷேவிங் மற்றும் வேக்சிங் செய்வதை விட எபிலேட்டரைப் பயன்படுத்துவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். சருமத்தின் மீது ஜென்டிலாக சுழலக்கூடிய இந்த எலக்ட்ரிக் கருவி, வேர்க்கால்களில் இருந்து முடியை ஈஸியாக வெளியே இழுக்க உதவுகிறது. மேலும் துளைகள் மாசு மற்றும் அழுக்குகளால் அடைபடுவதை தவிர்க்கவும் எபிலேட்டர் உதவுகிறது.