சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சரும வகையை அடிப்படையாக கொண்ட ஒரு சருமப் பராமரிப்பு வழக்கத்தை பலரும் பின்பற்றி வருகிறார்கள். ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற ஒரு நல்ல டோனர், மாய்ஸ்சரைசர் மற்றும் சீரம் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துவது உங்கள் சரும பராமரிப்பில் சிறப்பான வேலையை செய்யும். தூங்குவதற்கு முன் ஃபேஸ் மாஸ்க் போடுவது, நல்ல ஃபேஸ் வாஷை பயன்படுத்துவது உள்ளிட்ட வழக்கங்கள் சருமத்தை புதுப்பித்து நல்ல பொலிவை தரும். இதற்கிடையில் மேக்கப் உங்கள் அழகை மேம்படுத்தும். இருப்பினும் உங்கள் அழகை கூட்டி காட்டும் மேக்கப் பொதுவாக நீண்ட நேரம் நீடிக்காது.
டோனர் & மாய்ஸ்சரைஸ்: டோனரை பயன்படுத்திய பிறகு உங்கள் சருமம் மிகவும் பளபளப்பாக மற்றும் மென்மையாக இருக்கும். இப்போது உங்கள் சருமத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். போதுமான அளவு ஹைட்ரேட்டாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் சருமமும் எப்போதும் ஹைட்ரேட்டாக இருக்கும். உங்கள் ஸ்கின் டைப்பின் அடிப்படையில் மாய்ஸ்சரைசரை வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் இது ஆயில் - ஃப்ரீ தயாரிப்பாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் சருமத்தை தயார் செய்ய இந்த டிப்ஸ் உதவுகிறது.
ப்ரைமருடன் உங்கள் சருமத்தை தயார் செய்யுங்கள்: மேக்கப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் பயன்படுத்த வேண்டிய முதல் தயாரிப்பு ப்ரைமர் ஆகும். உங்கள் மேக்கப்பை நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்க உதவுவது இது தான். இது உங்கள் மாய்ஸ்சரைசரை சருமத்திலேயே லாக் செய்ய உதவுகிறது. எனவே BB கிரீம் அல்லது ஃபவுண்டேஷன் உங்கள் சருமத்தால் உறிஞ்சப்பட்டு மங்கி போகாது. ஒரு நல்ல தரமான ப்ரைமர் சருமத்தின் நிறத்தை சமன் செய்கிறது. உங்கள் ஸ்கின்னில் உள்ள துளைகள் மற்றும் சுருக்கங்களை மறைக்கிறது. நீடித்த மேக்கப்பிற்கு நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய டாப் மோஸ்ட் டிப்ஸ் ப்ரைமரைப் பயன்படுத்துவது தான்.
செட்டிங் ஸ்ப்ரே: முழுமையாக மேக்கப் போட்டு கொண்ட பிறகு அது உங்கள் முகத்தில் செட்-ஆக, செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்த மறக்காதீர்கள். செட்டிங் ஸ்ப்ரே உங்கள் மேக்கப்பிற்கு இறுதி டச்-அப்பாக வேலை செய்கிறது மற்றும் உங்கள் மேக்கப்பை அப்படியே வைக்க உதவுகிறது. அதே போல லிப் லைனர் மூலம் உங்கள் லிப்ஸ்டிக்கை லாக் செய்ய தவறாதீர்கள்.