வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் முகப்பருக்கள் ஏற்படுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. அதிலும் டீன் ஏஜ் காலகட்டங்களில் முகப்பருக்கள் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் அதனால் முகத்தின் அழகு பாதிக்கப்படுகிறது என்பதை மாற்றுக் கருத்து இல்லை. தவறான உணவு பழக்கவழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசுபட்ட சூழலில் வாழ்வது, மற்றும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் என முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அனைவரும் மிக வேகமாக இயங்கி வரும் இந்த வாழ்க்கை முறையில் முகப்பரு வராமல் பாதுகாத்துக் கொள்ள அதுக்கென தனி நேரம் ஒதுக்கி நம் சருமத்தை பராமரிப்பது அனைவருக்கும் முடியாத செயல். இதனால் முகப்பரு ஏற்பட்டு மறைந்தாலும் கூட அந்த தழும்பு அப்படியே இருக்கும். இது போன்ற காரணங்களினால் முகப்பரு வராமல் தடுப்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும். முகப்பரு வராமல் தடுக்க ஐந்து முக்கிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
புற ஊதா கதிர்கள் மற்றும் மாசுக்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் : சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் நம் சருமம் மற்றும் முகத்திற்கு கேடு விளைவிப்பவை. அதிகப்படியான புற ஊதா கதிர்கள் சருமத்தை பாதித்து முகப்பரு ஏற்படுவதற்கு வழி வகுக்கின்றன. மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடும் முகப்பருவு ஏற்பட காரணமாக உள்ளது. எனவே வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீனை சருமத்தில் தடவிக் கொண்டு செல்ல வேண்டும்.