இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் பியூட்டி ஹேக்குகள் மற்றும் டுடோரியல்கள் பல கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் டிரெண்டிங் செய்யும் அவர்கள் உண்மையிலேயே அழகுக்கலை நிபுணர்களா என யாரும் ஆராய்வதில்லை. இதையெல்லாம் கவனிக்காமலே அவர்கள் பகிரும் வீடியோக்களில் சொல்லப்படும் பியூட்டி டிப்ஸ் மற்றும் ஃபேஷன் டிப்ஸுகளை பின்பற்றுகிறோம். சிலருக்கு அது தவறாக முடிய பலரும் சரும நிபுணர்களை நாடும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளன.
பொதுவாக இதுபோன்ற விஷயங்கள் உங்கள் சருமத்தின் தன்மை, காலநிலை, உங்களுக்கு இருக்கும் உடல்நலன் சார்ந்த பிரச்சனைகள், ஒவ்வாமை என அனைத்திற்கும் ஒத்து வருமா என்பதை அறிந்த பின்பே பயன்படுத்த வேண்டும். அதுவும் சரும நிபுணர்களின் பரிந்துரையின்றி எதையும் பின்பற்றுவது தவறு. இதுபோன்ற ஹேக்குகள் சிலருக்கு பலன் தரலாம். சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அப்படி பொதுவான சில தவறான ஹேக்குகளை உங்களுக்காக பகிர்கிறோம். அவற்றை ஒருபோதும் முகத்தில் அப்ளை செய்யாதீர்கள்.
கரும்புள்ளிகளை அகற்றுதல் : கரும்புள்ளிகளை நீக்கும் விதவிதமான தந்திரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒன்று பெட்ரோலியம் ஜெல்லி தடவி நீக்குதல் மற்றும் நீளமான உலோகத்தை சூடாக்கி அதன் உதவியுடன் அகற்றுவது. ஆனால் இதைச் செய்வதன் மூலம் உங்கள் சருமத் துவாரங்கள் பெரிதாகி, சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படலாம் . எனவே இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் நீங்களே கரும்புள்ளிகளை அகற்ற முயற்சிக்காதீர்கள்.
முகத்தில் வேக்ஸ் அப்ளை செய்தல் : நீங்கள் முகத்தில் வேக்ஸ் செய்ய விரும்பினால், நீங்களே முயற்சி செய்யாதீர்கள். இதற்காக நீங்கள் ஒரு நிபுணர் அல்லது பார்லருக்கு செல்ல வேண்டும். இல்லையெனில், வெண்புள்ளிகள், இறந்த சருமம் அல்லது தோல் பதனிடுதல் போன்ற மேலோட்டமான தோல் பிரச்சனைகளை சரிசெய்யும் சுழற்சியானது தோலில் தழும்புகளை ஏற்படுத்தலாம்.