இந்தியாவில் தயிர் என்று அழைப்பதை தான் வெளிநாடுகளில் யோகர்ட் என்று அழைக்கின்றனர். தயிர் சாப்பிடுவது உடலுக்கு உள்ளே எவ்வளவு நன்மைகளை கொடுக்குமோ, அதே அளவிற்கு முகத்தில் பூசிக்கொள்ளும் போதும் பல நன்மைகளை கொடுக்கிறது. தயிர் எப்போதுமே சரும பராமரிப்புக்கு சிறந்தது. இதை பயன்படுத்துவதால் பழைய சரும செல்கள் அகன்று, ஆரோக்கியமான புதிய செல்கள் வளர்வதால் ‘சருமம் இன்னும் ஜொலி, ஜொலிக்கும்’ என உங்களை குதூகலமாக பாடவைக்கும்.
இனி உங்களுக்கு ஆன்லைனிலோ அல்லது கடைகளிலோ டிராலியை தள்ளிக்கொண்டு அழகு சாதன பொருட்களை தேட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் உங்கள் சருமத்தை மேம்படுத்த உதவும் மிக அற்புதமான மூலப்பொருளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதுவும் நியாயமான விலையில். அந்த அற்புதமான மேஜிக் பொருள் வேறெதுவும் இல்லை தயிர் தான், தயிரைக் கொண்டு ஃபேஸ் ஸ்க்ரப் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்...
தயிர் (யோகர்ட்) உங்கள் சருமத்தை ஸ்க்ரப்பிங் செய்த பிறகு, அது வறண்டு போவதை தடுத்து மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரிசி மாவுடன் தயிர் கலந்து ஸ்க்ரப் செய்து பயன்படுத்துவது, எண்ணெய் அல்லது கலவையான சருமம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
செய்முறை : ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் அதே அளவு தயிர் சேர்க்கவும்.இந்த கலவையுடன் அரை தேக்கரண்டி அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.இந்த மூன்று பொருட்களும் ஒன்றுடன் ஒன்று சேரும் வண்ணம் நன்றாக கலக்கவும்.இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் தடவி 3-5 நிமிடங்கள் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும்.உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
2. தயிருடன் ஆலிவ் எண்ணெய், தேன் மற்றும் கிரானுலேட்டட் சர்க்கரை ஸ்க்ரப்:தேனில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன, அவை உங்கள் சருமத்தை இயற்கையான பளபளப்பை அடைய உதவுவதோடு, வெடிப்புகள் உருவாவதையும் தடுக்கிறது. இது இறந்த செல்களை அகற்ற உதவும் தயிருடன் கலக்கும் போது, முகம் மேலும் பளபளக்கிறது.எந்த வித ஃப்ளேவரும் இல்லாத பிளைன் தயிர் 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
2 தேக்கரண்டி ஆலிவ் ஆயில், 1 தேக்கரண்டி தேனை எடுத்துக்கொள்ளுங்கள்.2 டேபிளில் ஸ்பூன் வெள்ளை அல்லது பழுப்பு சர்க்கரை சேர்க்கவும்.ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கரைத்துக்கொண்டு, முகம் முழுவதும் பூசவும்.அந்த கலவை காயும் வரை காத்திருந்து, அதன் பின்னர் முகத்தில் வட்ட வடிவத்தில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை தேய்த்து மசாஜ் செய்யவும்.பின் நீரில் முகத்தை நன்றாக கழுவி விட்டு, மாய்ஸ்சரைசர் பூசி உலரவைக்கவும்.
3. தயிர், ஓட்ஸ், தேன் கலந்த ஸ்க்ரப்:ஒரு சிறிய கிண்ணத்தில் 1 தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர், 2 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கவும்.இவை மூன்றையும் ஒன்றாக கலக்குங்கள்.முகத்தில் சிறிதளவு தண்ணீர் பூசி, அதன் மீது இந்த கலவையை பூசவும். பின்னர் ட்ட இயக்கத்தில் 5-6 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து அதனை தண்ணீரில் கழுவி, உங்களுக்கு பிடித்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.