சீசனுக்கு சீசன் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது மற்றும் ஃபேஸ் பேக் போல் பயன்படுத்துவது சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும். அப்படிப்பட்ட பழங்களில் கோடை காலத்தில் கிடைக்க கூடிய தர்ப்பூசணி பழம் தனி இடம் பிடிக்கிறது. அதன் இனிப்பு சுவையும், சிவப்பு நிறமும் தன்னுள் பல வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளன. தர்ப்பூசணியை சாப்பிடுவது அல்லது ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது தெளிவான மற்றும் பிரகாசமான சருமத்தை பெற உதவும்.
மறுபுறம் தேன் சருமத்தில் பழுப்பு நீக்கம், முகப்பரு, வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாகச் சேர்ந்தால், உங்களுக்கு ஆரோக்கியமான, மிருதுவான மற்றும் சூரிய கதிரியக்க பாதிப்புகளை தடுக்கும் ஃபேஸ் மாஸ்க்கை கொடுக்க முடியும். 2 டீஸ்பூன் தர்பூசணி சாறு மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து, அதனை முகத்தில் பூசி சுமார் 20 நிமிடங்கள் வைத்திருங்கள். அதன் பின்னர் பஞ்சு அல்லது மிருதுவான காட்டன் துணி கொண்டு லேசாக துடைத்து எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. தர்ப்பூசணி + தயிர்: தர்ப்பூசணி, தயிர் இரண்டுமே கோடை காலத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது, இது இரண்டையும் கலந்து உங்கள் முகத்திற்கு பேக்காக அப்ளே செய்யும் போது அதனால் அற்புதமான ஒரு மேஜிக் நிகழ வாய்ப்புள்ளது. இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 2 டீஸ்பூன் தர்பூசணி சாறு கலந்து மென்மையான பேஸ்ட் தயாரிக்க வேண்டும். அந்த கலவையை முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே இருங்கள். அதன் பின்னர் சருமத்தை சாதாரண நீரில் கழுவினால், ப்ரஷான மற்றும் பளபளப்பான சருமத்தை பெறலாம்.
3. தர்ப்பூசணி + பால்: பால் ஒரு நேச்சுரல் கிளேன்சர் ஆகும், இது இறந்த செல்களை அகற்றுவதோடு, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது. கடுமையான வெப்பத்தால் உங்கள் நீரிழப்பில் சிக்கித் திண்டாடுவதை தடுத்து, தேவையான அளவு ஈரப்பதத்தை கொடுக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது சில தர்பூசணி துண்டுகளை மசித்து, அதில் 2 தேக்கரண்டி பால் சேர்க்கவும். அடுத்து, ஒரு வைட்டமின் ஈ மாத்திரைக்கு உள்ளே உள்ள கலவையை கலக்கவும். இதை உங்கள் முகத்தில் சமமாக தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். நன்றாக உலர்ந்த பிறகு முகத்தை கழுவலாம்.
4. தர்ப்பூசணி + வெள்ளரிக்காய்: தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் இரண்டும் சருமத்திற்கு அதிக நன்மைகளை தரக்கூடியது. வெள்ளரிக்காய் குளிர்ச்சியோடு, முகத்தில் சூரிய வெப்பத்தால் ஏற்படும் நிறமாறுபாடுகளை அகற்ற உதவுகிறது. தர்ப்பூசணி சருமத்தில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு மற்றும் நீரிழப்பை சரி செய்ய பயன்படுகிறது. சிறிதளவு தர்பூசணி சாறுடன், ஒரு டீஸ்பூன் வெள்ளரிக்காய் கூழ் கலந்து ஃபேஸ் பேக்கை தயார் செய்யவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் சமமாக தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமம் நன்றாக நீரேற்றம் அடைத்து, புத்துணர்ச்சியுடன் காணப்படும்.