உதடுகளின் வறட்சியை தடுக்க லிப் பாம்கள் வரம் போன்றவை. அப்படி நாள் முழுக்க தேவைப்படும்போதெல்லாம் அப்ளை செய்துகொள்ளும் லிப் பாம்கள் கெமிக்கல் நிறைந்தவையாக இருப்பின் அவை அலர்ஜியை உண்டாக்கலாம். அதேசமயம் கெமிக்கல் அல்லாத இயற்கை முறையிலான காஸ்மெடிக்ஸ் பொருட்களை விரும்புவோருக்கும் இந்த லிப் பாம் DIY நிச்சயம் பிடிக்கலாம். சரி வீட்டிலேயே லிப் பாம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேன் லிப் பாம் : தேன் அடை என்று சொல்லப்படும் பீ வேக்ஸை உருக வைத்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதில் தேனும் கலக்கவும். வாசனை வேண்டுமெனில் ஏதேனும் எசன்ஷியல் ஆயில் சேர்க்கலாம். பின் அவை அனைத்தையும் கெட்டியான பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின் அது ஆறியதும் டப்பாவில் அடைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். கடைகளில் லிப் பாம் கண்டெய்னர்கள் கிடைக்கும்.
ஆரஞ்சு லிப் பாம் : ஆரஞ்சு ஜூஸை பிழிந்து அதை கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் பீ வேக்ஸ், ஷீ பட்டர் இரண்டையும் உருக வைத்து அதில் தேங்காய் எண்ணெய், கொதிக்க வைத்த ஆரஞ்சு ஜூஸ் , வாசனை எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துவிட்டு கொதிக்கவிடுங்கள். கெட்டியான பின் அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடு தணிந்ததும் டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.