முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

வீட்டில் தயாரித்த மாய்ஸ்சரைசரை உங்களது சருமத்தில் தடவி, சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் போதும் சருமம் பிரகாசமாக இருக்கும்.

 • 18

  காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

  சருமம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியாகவும் எப்போதும் இருக்க வேண்டும் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பு..இருந்தப்போதும் பலருக்கு தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக சருமம் சிலருக்கு எண்ணெய் பிசுபிசுப்புடன் அல்லது வறண்டு காணப்படும். தனித்தனியாக இந்த பிரச்சனைகள் வந்தாலே சமாளிப்பது மிகவும் கஷ்டம். இவை இரண்டு கலந்த கலவையாக காம்பினேஷன் சருமம் என்றால் சொல்லவா வேண்டும்? நிச்சயம் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 28

  காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

  முதலில் காம்பினேஷன் சருமம் என்றால் என்ன.. எனத் தெரியாதவர்கள் இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். எப்போதும் எண்ணெய் பசையோடு இருக்கும் சருமத்தை ஆயில் சருமம் என்றும், மிகவும் குறைவான எண்ணெய் பசை கொண்ட சருமத்தை வறண்ட சருமம் என்கிறோம். அதே சமயம் இவை இரண்டு கலந்து சில நேரங்களில் சருமத்தில் பிரச்சனை ஏற்படும் போது தான் இதை நாம் காம்பினேஷன் சருமம் என்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 38

  காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

  இந்த வகை சருமம் கொண்டவர்களுக்குப் பெரும்பாலும் T சோன் என்றழைக்கப்படும் இடமான நெற்றி, மூக்கு மற்றும் சில இடங்களில் அதிக எண்ணெய் பசையோடும், இரண்டு கண்ணங்களிலும் எண்ணெய் பசை இல்லாமல் வறண்டு காணப்படும். இவ்வகை சருமம் ஏற்படுவதற்கு பருவகால மாற்றங்கள், மரபியல் மற்றும் ஹார்மோன் சுரப்பியில் ஏற்படும் மாற்றங்கள் காரணங்களாகக் கூறப்படுகிறது. இதுப்போன்ற சருமம் உங்களுக்கும் உள்ளதா? கவலை வேண்டாம். இதற்குத் தீர்வு காண்பதற்கு நீங்கள் வீட்டிலேயே DIY மாய்ஸ்சரைசரை தயாரிக்கலாம்.. இதோ எப்படி என இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 48

  காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

  அலோ வேரா மற்றும் கிரீன் டீ மாய்ஸ்சரைசர்: கற்றாழையில் உள்ள எண்ணற்ற குணங்கள் உங்களது சருமத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் சருமம் பாதுகாக்கப்படுகிறது. எனவே காம்பினேசன் சருமம் கொண்டவர்கள், கற்றாழை மற்றும் கிரீன் டீ கலந்த மாய்ஸ்சரைசரை நீங்கள் பயன்படுத்தலாம். இதை வீட்டிலேயே நீங்கள் செய்வதற்கு முதலில், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் க்ரீன் டீ கலந்துக்கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை நன்றாக சுத்தம் செய்து முகத்தில் இந்த மாய்ஸ்சரைசரை நீங்கள் அப்ளே செய்யலாம். இது உங்களது முகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

  தேன் மற்றும் ஓட்ஸ் மாய்ஸ்சரைசர்: வறண்ட மற்றும் எரிச்சலூட்டும் சருமத்திற்கு ஓட்ஸ் சிறந்ததாக உள்ளது. இதனுடன் தேனும் கலந்திருக்கும் போது இயற்கையாகவே காற்றில் இருந்து ஈரப்பத்தை ஈர்த்து சருமத்தில் தக்க வைத்துக்கொள்ள உதவியாக உள்ளது.நீங்கள் இந்த மாய்ஸ்சரைசரை வீட்டில் செய்ய வேண்டும் என்றால், 1 டேபிள் ஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் அரைத்த ஓட்ஸ் மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்ந்து பேஸ்ட் போன்று கலக்கிக்கொள்ள வேண்டும். இதையடுத்து நீங்கள் வீட்டில் தயாரித்த மாய்ஸ்சரைசரை உங்களது சருமத்தில் தடவி, சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் போதும் சருமம் பிரகாசமாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 68

  காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

  தயிர் மற்றும் வெள்ளரி மாய்ஸ்சரைசர்: தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றவும், வெள்ளரிக்காய் சருமத்தை ஈரப்பதமாக்கும் பணிகளை செய்வதால் தான் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றே கூறலாம். இந்த மாய்ஸ்சரைசரை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்ய வேண்டும் என்றால் அரை கப் தயிருடன், அரை கப் வெள்ளக்கரிக்காய் கலந்து முகத்தில் தடவி 15- 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். இதையடுத்து குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 78

  காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

  ரோஸ்வாட்டர் மற்றும் கிளிசரின்: ரோஸ் வாட்டர் நீண்ட காலமாக தோல் பராமரிப்பின் ஒரு பகுதியாக உள்ளது. இது மற்றவற்றைப் போல சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் மென்மையாக்குகிறது. மறுபுறம், கிளிசரின் - தேனைப் போலவே சருமத்தில் ஈரப்பதத்தை ஈர்க்கும் பணிகளையும் மேற்கொள்கிறது. இந்த மாய்ஸ்சரைசரை தயாரிக்க வேண்டும் என்றால், 1/2 கப் ரோஸ் வாட்டருடன் 2 டேபிள் ஸ்பூன் கிளிசரின் கலந்து, பருத்திப் பந்தைப் பயன்படுத்தி முகத்தில் தடவவும்.

  MORE
  GALLERIES

 • 88

  காம்பினேஷன் சருமத்திற்குத் தீர்வு காண வீட்டில் மாய்ஸ்சரைசர் தயாரிக்க டிப்ஸ்..!

  இதே போன்று ஷியா எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெய் மாய்ஸ்சரைசர் மற்றும் கொக்கோ வெண்ணெய் மற்றும் ரோஸ்ஹிப் எண்ணெய் மாய்ஸ்சரைசர்களும் உங்களது சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES