முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பற்களின் வரிசையை அழகாக சீராகவும் மாற்ற உதவும் அலைனர்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க.!.!

பற்களின் வரிசையை அழகாக சீராகவும் மாற்ற உதவும் அலைனர்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க.!.!

சமீபத்தில் நடத்திய ஆய்வு அறிக்கை படி பத்தில் ஒருவர் இந்த அலைனர்களை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

 • 16

  பற்களின் வரிசையை அழகாக சீராகவும் மாற்ற உதவும் அலைனர்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க.!.!

  தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதும் மற்றவர் நம்மை பார்த்து வியக்க வேண்டும் என்பதும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான நியாயமான ஆசைதான். ஆனால் சிலருக்கு முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் பற்கள் சீரற்ற வரிசையில் வளர்ந்திருக்கும். இதனால் ஒட்டுமொத்த முகத்தின் அழகையே சீரற்ற பற்களின் வளர்ச்சியானது கெடுத்து விடுவது போல் தோன்றும். ஆனால் அதை சரி செய்வதற்கும் ஒரு வழி உண்டு அதை பற்றி பலருக்கு தற்போது வரை தெரியாமல் உள்ளது. அவை தான் அலைனர்கள் என்று அழைக்கப்படும் சீரமைப்பான்கள் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 26

  பற்களின் வரிசையை அழகாக சீராகவும் மாற்ற உதவும் அலைனர்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க.!.!

  இந்த அலைனர்கள் சீரற்ற வரிசையில் வளரும் பற்களை ஒழுங்குபடுத்தி சீரான விதத்தில் வளரும்படி செய்கிறது. மேலும் இந்த அலைனர்கள் அணிந்து கொண்டிருப்பவர்களுக்கு எந்தவித சங்கடமும் ஏற்படாத வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக எளிமையாகவும், எந்தவித அசவுகரியம் இன்றியும் பார்ப்பதற்கு அழகாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பற்களில் அணிந்து கொள்ளும் போது இவை குறிப்பிட்ட அளவு அழுத்தத்தை பற்களின் மீது ஏற்படுத்தி அவை ஒரு ஒழுங்கில் வளர்வதற்கு உதவி செய்கிறது.

  MORE
  GALLERIES

 • 36

  பற்களின் வரிசையை அழகாக சீராகவும் மாற்ற உதவும் அலைனர்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க.!.!

  மேலும் இவற்றை அணிந்து கொண்டிருப்பதால் உணவு உண்பதில் எந்தவித சங்கடங்களும் ஏற்படாது. ஏனெனில் இவற்றை நாம் விரும்பிய போது நம்மால் கழட்டி விட முடியும். மேலும் இவை கண்ணாடி போன்று ஒளிபுகும் வகையில் இருப்பதால் இவற்றை நீங்கள் அணிந்து கொண்டிருப்பதை நெருக்கத்தில் உள்ளவரால் கூட கண்டறிய முடியாது. மேலும் பற்கள் சீராக வளர்வது மட்டுமல்லாமல் மற்றும் பல நன்மைகளையும் இந்த அலைனர்கள் அணிவதால் நம்மால் பெற இயலும்

  MORE
  GALLERIES

 • 46

  பற்களின் வரிசையை அழகாக சீராகவும் மாற்ற உதவும் அலைனர்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க.!.!

  இவற்றை அணிந்து கொண்டிருப்பதன் மூலம் ஈறு அழற்சி ஏற்படுவதையும் டார்டார்கள் உண்டாவதையும் தடுக்க முடியும். டார்ட்டார் என்பது ஈறுகள் மற்றும் பற்களின் மீது படிந்து ஈறு அழற்சி மற்றும் பீரியடாண்டிஸ் என்ற நோயை உண்டாக்குகிறது. ஈறு அழற்சி ஏற்பட்டால் தினசரி பற்களை துலக்கும் போது அவை ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தி இரத்தம் வெளியாகும். பீரியடாண்டிஸ் நோய் பற்கள் விரைவாக விழுவதற்கு வழிவகுக்கும். பற்களைத் தாக்கும் இந்த இரண்டு நோய்களுமே அலைனர்கள்களை பயன்படுத்துவதால் தவிர்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  பற்களின் வரிசையை அழகாக சீராகவும் மாற்ற உதவும் அலைனர்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க.!.!

  மேலும் முன்னர் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த முறைகளோடு ஒப்பிடும்போது, இந்த அலைனர்கள் மிக விரைவான நல்லவிதமான சிகிச்சை முடிவுகளை அளிப்பதாக தெரியவந்துள்ளது. விரைவாக பற்களின் வரிசையை ஒழுங்குபடுத்துவதோடு பல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் வருவதையும் தவிர்க்கிறது. முக்கியமாக இன்றைய காலத்தில் இளம் வயதினர் பலரும் இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 66

  பற்களின் வரிசையை அழகாக சீராகவும் மாற்ற உதவும் அலைனர்ஸ் பற்றி தெரிஞ்சுகோங்க.!.!

  சமீபத்தில் நடத்திய ஆய்வு அறிக்கை படி பத்தில் ஒருவர் இந்த அலைனர்களை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இதனுடைய தெளிவான ஒளி புகும் தன்மையிலான வடிவமைப்பால் இதனை அணிந்து கொண்டிருப்பது மற்றவர்களுக்கு தெரியவே தெரியாது. அதுமட்டுமின்றி பற்களுக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் மற்றவர்களால் கண்டறிய இயலாது என்பதால் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர்.

  MORE
  GALLERIES