பண்டிகைக் காலம் வந்தாலே தன்னை அழகுப்படுத்தி கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும் வந்துவிடுகிறது. அந்த வகையில், இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளதால், ஒவ்வொரு பெண்ணும் அழகாகவும் பிரமிக்க வைக்கும் விதமாக பல்வேறு மேக்கப் வழிகளை பற்றி தேடி கொண்டிருப்பார்கள். இந்த ஆண்டு விடுமுறைக் காலத்தை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட சில மேக்கப் டிரெண்டுகளை உங்களுக்கு நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். பளபளக்கும் கண்கள், கவர்ந்திழுக்கும் உதடுகள், இயற்கையான ஒப்பனை, குறைபாடற்ற சருமம் ஆகியவை பார்ட்டி சீசனுக்கு உங்களை உற்சாகப்படுத்தும் சில மேக்கப் டிரெண்டுகள். இவற்றை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
மினுமினுக்கும் கண்கள் : மெட்டாலிக் கலர் ஐ ஷேடோக்கள் உங்கள் கண்களுக்கு மேற்கூட்ட ஒரு சிறந்த வழியாகும். உடனடியான நிறத்தைப் பெற கோல்டன் அல்லது காப்பர் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். பெஜ்வெல்ட் கண்கள் இந்த சீசனில் புதிய டிரெண்ட் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் வண்ண ஐலைனர்கள், கிராஃபிக்கல் ஐலைனர்கள், கனமான டெயிலை விட குறுகிய இயற்கை லிப்ட் ஐ லைனர்கள் ஆகியவை இந்த பண்டிகை சீசனில் சிறந்த தேர்வுகள் ஆகும். மேலும், நீலம் மற்றும் பச்சை நிற ஐ-ஷேட்ஸ் ஒரு சிறந்த தேர்வாகும். நீங்கள் கண்களுக்கு மேக்கப் போடும்போது அவசியம் இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
கவர்ந்திழுக்கும் உதடுகள் : சிவப்பு லிப் கலர் என்பது எப்போதும் பிரபலமான நிறமாகும். எனவே, இதில் மேட் அல்லது லிக்யூட் லாங் ஸ்டே லிப்ஸ்டிக்களை நீங்கள் பயன்படுத்தலாம். டீப் ஒயின், ஊதா மற்றும் பர்கண்டி ஆகியவற்றில் உள்ள லிப் ஷேட்களும் தேர்வு செய்யக்கூடிய பிற வண்ணங்களாகும். இது பளபளப்பான உதடுகளை உங்களுக்கு தரும். அவுட்லைன் செய்யப்பட்ட உதடுகள் என்பவை பண்டிகைக் காலத்தின் சமீபத்திய ட்ரெண்ட் ஆகும். உதடுகள் முழுவதும் உதடு கறையை துடைத்து விட்டு, அதன் மேல் தெளிவான லிப் க்ளாஸைப் பயன்படுத்தலாம். இது உதடுகளை கவர்ச்சியாகவும் ஜூசியாகவும் எடுத்துக்காட்டும்.
பிரைட் ப்ளஷ் :போல்ட் பீச் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் பிரைட் கலர் ப்ளஷ்ஸ் இந்த பண்டிகை காலத்தின் தற்போதைய டிரெண்ட் ஆகும். ஒரு பஞ்சுபோன்ற பிரஷ் பயன்படுத்தி, சரியான அளவை எடுத்துக்கொண்டு கன்னத்தின் அனைத்து பகுதிகளிலும் தாராளமாக தடவவும், இதை கன்னத்தின் எலும்பிலிருந்து மயிரிழை வரை நீட்டிக்கவும். இந்த புது ட்ரெண்ட் உங்கள் முகத்திற்கு புதிய தோற்றத்தை அளிக்கிறது.
தடிமனான புருவங்கள் : அடர்த்தியான, முடி நிறைந்த, இயற்கையான மற்றும் பஞ்சுபோன்ற புருவங்கள் இந்த கிறிஸ்துமஸிற்கு ஏற்ற ஒன்று. லேமினேஷன் புருவம் என்பது புருவங்களை முழுமையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் சமீபத்திய நுட்பமாகும். இது பக்கவாட்டிற்குப் பதிலாக, புருவ முடியை மேல்நோக்கிச் செல்வதன் மூலம் அடர்த்தியான புருவ தோற்றத்தை தருகிறது. ப்ரோ பென்சில், ப்ரோ மெழுகு, புருவம் போமேட் அல்லது டாட்டூ எஃபெக்ட் புருவ மார்க்கர் போன்ற பொருட்களை கண் புருவங்களை அழகுபடுத்த பயன்படுத்தலாம்.