ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

பளபளப்பான சருமத்தை பெற நிச்சயமாக ப்ளீச் சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும். நீங்கள் ப்ளீச் செய்ய தீர்மானித்தால் உங்கள் சருமத்தில்  கூடுதலாய் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

 • 16

  நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

  அனைவருமே தங்கள் சருமம் பிரகாசமாக மற்றும் தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்கள் சருமத்தை பளிச்சென்று ஆக்க பலர் ப்ளீச்சிங்கை தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். சிலர் தங்கள்த முகத்தில் இருக்கும் முடிகளை அகற்ற விரும்புகிறார்கள், சிலர் அவற்றை ப்ளீச் செய்ய விரும்புகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 26

  நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

  பளபளப்பான சருமத்தை பெற நிச்சயமாக ப்ளீச் சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும். நீங்கள் ப்ளீச் செய்ய தீர்மானித்தால் உங்கள் சருமத்தில் கூடுதலாய் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவு கூட சில பெரிய தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஏனென்றால் இதில் சில கடினமான கெமிக்கல்ஸ் உள்ளன. உங்கள் முகத்தை ப்ளீச் செய்ய நீங்கள் திட்டமிட்டால், மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

  அமோனியாவை கலப்பதில் கவனம் தேவை: நல்ல பலன் கிடைக்கும் என்ற ஆசையில் ப்ளீச் கரைசலை கலக்கும் போது நம்மில் சிலர் அமோனியாவை அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் இது தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் ப்ளீச்சில் அதிக அமோனியா சேர்ப்பது நமது சருமத்தை உலர்ந்த சருமமாக்கி விடும்.

  MORE
  GALLERIES

 • 46

  நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

  முகத்தில் நேரடியாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்: எப்போதும் உங்கள் முகத்தில் நேரடியாக ப்ளீச் பயன்படுத்துவதற்கு முன், முதலில் பேட்ச் டெஸ்ட் (patch test) செய்யுங்கள். இந்த டெஸ்ட் உங்கள் சருமம், நீங்கள் பயன்படுத்த போகும் தயாரிப்புக்கு சாதகமாக செயல்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள இது உதவும். பேட்ச் டெஸ்ட்டின் போது தடிப்புகள் ஏற்பட்டால், குறிப்பிட்ட ப்ளீச் தயாரிப்பை தவிர்த்து விடுங்கள். உங்கள் முகத்தைப் பாதுகாக்க பேட்ச் டெஸ்ட் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

  கண்களை சுற்றியுள்ள பகுதிகள்.. முகத்தில் உள்ள மற்ற பகுதி சருமத்தை விட கண்களை சுற்றியுள்ள சருமம் மிகவும் சென்சிட்டிவானது. எனவே அந்த பகுதிகளில் ப்ளீச்செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் ப்ளீச் முடியின் நிறத்தை ஒளிர செய்யும் தன்மை கொண்டது. கண்களை சுற்றிய பகுதிகளுக்கு ப்ளீச் சரிந்து வந்தால் உடனடியாக அந்த பகுதியை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

  MORE
  GALLERIES

 • 66

  நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

  நேரம் முக்கியம்: பெரும்பாலான மக்கள் உடனடி முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள் மற்றும் நிகழ்வுக்கு ஒரு இரவு முன் ப்ளீச் பயன்படுத்துகிறார்கள். இது நல்ல பலனைத் தர வாய்ப்பில்லை. ஏனென்றால் ப்ளீச்சின் பலன் சில நாட்களுக்கு பிறகே தெரியும், உடனடியாக அல்ல. எனவே முகத்தை ப்ளீச்சிங் செய்வதால் கிடைக்கும் சிறந்த முடிவுகளுக்கு, ஒரு பெரிய நிகழ்ச்சி அல்லது வேறு விசேஷங்களில் கலந்து கொள்வதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு ப்ளீச்சிங் பயன்படுத்துவது நல்லது. மேலும், ப்ளீச்சிங் செய்த பிறகு நேரடியாக வெயிலில் செல்வது மற்றும் தூசியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES