நம்மில் பலர் எதிர்கொள்ளும் இயல்பான சரும பிரச்சனைகளில் முகப்பருக்களும் ஒன்று. நமக்கு பிடித்த நடிகையின் புகைப்படத்தை பார்க்கும் போது, நாம் அனைவரும் நினைத்திருப்போம் எப்படி இவர்களின் சருமம் மட்டும் இவ்வளவு பளபளப்புடன் மென்மையாக இருக்கிறது என்று. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒன்றே ஒன்று தான். ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வது. சருமத்தின் அதிகப்படியான எண்ணெய்ப்பசை, கிருமி தொற்று போன்ற பல காரணங்களால் முகத்தில் பருக்கள் அதிகம் தோன்றுகின்றன. இந்த பருக்களை குறைக்க உதவும் உணவு பொருட்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.