நமது உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள் செயல்படுவதற்குத் தேவையான வைட்டமின் என்றால் அது வைட்டமின் ஈ தான். இதில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்ன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், உடலில் தேவையற்ற கிருமிகள் சேர்வதைத் தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல், வைட்டமின் ஈ சத்துக்கள் சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவியாக உள்ளது. மேலும் முதுமை தோற்றத்தைத் தவிர்ப்பதற்கும் வைட்டமின் ஈ பயனுள்ளதாக இருப்பதோடு உடலில் இரத்தம் உறைதல் மற்றும் நுரையீரலில் மாசுக்கள் படிவது வைட்டமின் ஈ தடுக்கிறது.
எனவே தான் கீரைகள், காய்கறிகள், பழங்கள் ,கோதுமை போன்ற வைட்டமின் ஈ நிறைந்த உணவுப்பொருள்களை நம்முடைய அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஒருவேளை உங்களால் வைட்டமின் ஈ சத்துள்ள உணவுகளை உட்கொள்வதற்குப் பதிலாக எவியன் காப்ஸ்யூல்கள் எனப்படும் வைட்டமின் ஈ மாத்திரைகளை நீங்கள் உபயோகிக்கலாம். இதோ வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களின் அதிகப்பட்ச பலன்களைப் பெற நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் இங்கே:
நக வளர்ச்சி : சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தைகள் பராமரிப்பது, அலுவலக வேலை, தோட்ட வேலை என நம்மில் பலர் தொடர்ந்து பல்வேறு வகையான வேலைகளை செய்வதால், நாள் முழுவதும் கைகள் அயராது உழைக்கின்றது. இவ்வாறு நாம் செய்யும் பணிகளால் பல நேரங்களில் கைகளில் தோல் உரிதல், வெட்டுக்காயம், புண்கள் மற்றும் நகங்கள் மஞ்சள் நிறமாகி உடையக்கூடும். எனவே கைகளையும், நகங்களையும் பராமரிப்பதற்கு வைட்டமின் ஈ எண்ணெய்யை நீங்கள் உபயோகிக்கலாம். இரவு நேரத்தில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னதாக உங்களது நகங்களைச் சுற்றியுள்ள தோலை மெதுவாக வைட்டமின் ஈ எண்ணெய்யைப் பயன்படுத்தி மசாஜ் செய்யவும்.
முடி வளர்ச்சி : முடி கொட்டுதல் பிரச்சனை என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. இதற்காக பல ஆயுர்வேத எண்ணெய்களை நீங்கள் உபயோகித்தாலும் சில நேரங்களில் பலன் கிடைக்காது. இதற்கு வைட்டமின் ஈ எண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது. எனவே நீங்கள் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் இருந்து எண்ணெய்யை கசக்கி எடுத்து வழக்கமாக தலைமுடிக்கு தேய்க்கும் எண்ணெய்யுடன் தேய்க்கவும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு வாரம் செய்து வந்தால் முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
வயதான தோற்றத்தைத் தடுத்தல் : சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தை மறைப்பதற்கு வைட்டமின் ஈ பயனுள்ளதாக உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே வைட்டமின் ஈ எண்ணெயை உங்கள் சருமத்தில் மசாஜ் செய்வது உங்கள் சரும அமைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை உறுதியாகவும் பளபளப்பாகவும் மாற்றுவதற்கு உதவியாக உள்ளது.
வெயிலிருந்துப் பாதுகாத்தல் : வெயிலில் சென்றாலே பலருக்கு அலர்ஜி ஏற்படும். இதோடு உங்கள் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். எனவே இதிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் வைட்டமின் ஈ எண்ணெய்யையும் குளிர்விக்கும் கிரீம் கலந்து உபயோகிக்கலாம். இருந்தப்போதும் வெயியில் சென்றால் சன்ஸ்கிரீன் உபயோகிக்கவும். இதோடு சருமத்தில் ஏற்படும் பருக்கள், வடுக்கள் போன்றவற்றையும் சரிசெய்யவும் உதவியாக உள்ளது.