ஃபேஸ் ஆயில்கள் முகத்தில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட எண்ணெய் சார்ந்த, திரவ தோல் பராமரிப்பு பொருட்களாகும். இவை பொதுவாக காமெடோஜெனிக் அல்லாத தாவரவியல் எண்ணெய்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஃபேஸ் ஆயில்கள் சரும ஈரப்பதத்தை தக்க வைக்க சிறப்பாக செயல்படுகின்றன. தொடர்ந்து வறண்ட சருமம் உள்ளவர்கள், டிஹைட்ரேட்டட் சருமங்களை கொண்டுள்ளவர்களின் சருமங்களை மென்மையாக்க மற்றும் ஈரப்பத இழப்பை தடுக்க இவை உதவுகின்றன.
ஃபேஸ் ஆயில்களில் Argan oil மற்றும் jojoba oil இரண்டும் சிறந்த பலன்களை தருகின்றன. இதில் Argan oil-ல் அன்சேச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்டவை நிறைந்துள்ளன. எனவே Argan ஃபேஸ் ஆயிலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்துவது வயதாகும் அறிகுறிகளை குறைக்க மற்றும் தாமதப்படுத்த உதவி, சருமத்தை புத்துணர்ச்யாக வைக்கிறது. மேலும் இந்த ஆயில் சருமத்தில் எளிதாக உறிஞ்சப்படும் என்பதால், போதுமான ஊட்டமளித்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
சருமத்தை க்ளென்சிங் செய்த பிறகு சில துளிகள் Argan oil எடுத்து முகத்தில் நேரடியாக அப்ளை செய்து மசாஜ் செய்யலாம். Argan oil மிகவும் ஹைட்ரேட்டானது என்பதால் அது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து உங்கள் முகத்தை பிரகாசமாக மற்றும் மென்மையாக மாற்றுகிறது. 100 மில்லி ரோஸ் வாட்டரில் சில துளிகள் Argan oil சேர்த்து சரும டானிக்காகவும் பயன்படுத்தலாம். Jojoba oil சருமத்தின் இயற்கை எண்ணெய் போன்ற தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளது. சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுவதோடு பாக்டீரியா தொற்று, முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கிறது. Argan oil மற்றும் jojoba oil-கள் முக்கிய ஃபேஸ் ஆயில்களாக இருந்தாலும் சீசம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில்கள் குறைவான செயல்திறன் கொண்டவை என்று அர்த்தமல்ல.
சில நேரங்களில் ப்ரஸ்டு & அத்தியாவசிய ஆயில்கள் அல்லது ப்ரஸ்டு ஆயில் மட்டும் (இனிப்பு பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய்) அல்லது வாசனையற்ற ஆயில்கள் சென்சிட்டிவான சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரம் ஆயில் ஸ்கின் கொண்டவர்கள் ஸ்வீட் பேசில் ஆயிலை சருமத்திற்கு பயன்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி முகப்பரு உள்ளிட்ட சரும பிரச்சனைகளை எதிர்த்துப் போராட துணை நிற்கிறது. மேலும் இந்த ஆயிலை சாதாரண மற்றும் வறண்ட சருமத்திற்கும் பயன்படுத்தலாம். ஆயுர்வேத ஃபேஸ் ஆயில்களில் பிரபலமாக உள்ள குங்குமாதி தைலத்தில் சுமார் 24 மூலிகை சாறுகள் அடங்கி இருக்கிறது. குங்குமாதி தைலத்தில் குங்குமப்பூ, சந்தனம், ஹிமாலயன் செர்ரி, வெட்டிவர், இந்தியன் பார்பெர்ரி, ஆலமர இலைகள் உள்ளிட்ட பல விலைமதிப்பற்ற இயற்கை மூலிகைகளின் சாறுகள் உள்ளன என கூறி இருக்கிறார் ஷானாஸ் ஹுசைன்.