முகப்பு » புகைப்பட செய்தி » ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

சரியான ஹேர் ஜெல்லை நாம் பயன்படுத்தும் போது அவை சுருள் முடியை இன்னும் அழகாக காண்பிக்க உதவும்.

  • 19

    ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

    இன்றைய கால ஆண்கள் மற்றும் பெண்களில் பலரும் தங்களது முடியை பராமரிப்பதற்கு புதிய புதிய ஹேர் ஸ்டைல்களை முயற்சி செய்து பார்ப்பதற்கும் ஹேர் ஜெல்லை பயன்படுத்துகிறார்கள். ஹேர் ஜெல்லை பயன்படுத்துவதன் மூலம் உங்களது முடியின் அமைப்பை மாற்றாமல் உங்களது ஹேர் ஸ்டைலை மட்டும் விதவிதமாக உங்களால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

    MORE
    GALLERIES

  • 29

    ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

    மேலும் தற்போது சந்தையில் கிடைக்கும் சில ஹேர் ஜெல்கள் உங்களது முடியை மாய்சுரைஸ் செய்வதோடு தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. சரியான ஹேர் ஜெல்லை நாம் பயன்படுத்தும் போது வானிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட, அவை நமது முடியின் ஆரோக்கியத்தை பேணி காக்கிறது.

    MORE
    GALLERIES

  • 39

    ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

    இவ்வாறு சரியான ஹேர் ஜெல்லை தேர்ந்தெடுக்க வேண்டுமெனில், அவற்றில் கலந்துள்ள உட்பொருட்களின் தன்மையைப் பொறுத்தே தேர்ந்தெடுக்க வேண்டும். அவை நமது முடிக்கு ஏற்ற வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஹேருக்கு தினசரி ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 49

    ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

    இயற்கையான அடர்த்தி : ஹேர் ஜெல் பயன்படுத்தும்போது அவை நமது தலைமுடியை இயற்கையாகவே அடர்த்தியாக காண்பிக்கும். மேலும் அதில் கலந்துள்ள வேதிப்பொருட்களின் தன்மையைப் பொருத்தும் முடியின் அடர்த்தி மாறுபடும். சில குறிப்பிட்ட வகையான ஹேர் ஜெல் நமது தலைமுடி அனைத்தையும் ஒன்று சேர்த்து, அவை ஒன்றுடன் ஒன்று உராய்வதை தடுக்கிறது இதன் மூலம் அவை பார்ப்பதற்கு மிகவும் அடர்த்தியாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 59

    ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

    சுருள் முடி : சரியான ஹேர் ஜெல்லை நாம் பயன்படுத்தும் போது அவை சுருள் முடியை இன்னும் அழகாக காண்பிக்க உதவும். சரியான அளவிற்கு தலை முடியை மாய்சுரைஸ் செய்யும்போது, அவை இந்த ஹேர் ஜெல்லின் செயல் திறனை இன்னும் அதிகரிக்கிறது. இயற்கையான சுருள் முடி ஸ்டைலை பெறுவதற்கு தலைமுடி ஈரமாக இருக்கும்போது ஹேர் ஜெல் பயன்படுத்துவது சிறந்தது.

    MORE
    GALLERIES

  • 69

    ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

    ஹேர் ஸ்டைல் : அவ்வப்போது களைந்து விடும் உங்களது ஹேர் ஸ்டைலை, நீண்ட நேரத்திற்கு தக்க வைப்பதற்கு ஹேர் ஜெல் உதவுகிறது. மேலும் வெளியில் வானிலை எப்படி இருந்தாலும் உங்களது ஹேர் ஸ்டைலில் மாற்றம் இருக்காது. அதற்கு முதலில் சரியான உட்பொருட்கள் கலந்துள்ள ஹேர் ஜெல் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது மிகவும் நல்லது.

    MORE
    GALLERIES

  • 79

    ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

    பக்க விளைவுகள்.... அரிப்பு, எரிச்சல் : ஹேர் ஜெல்களில் காணப்படும் ஆல்கஹால் மற்றும் சில அமிலங்கள் முடி மற்றும் வேர்க்கால்களில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து வறட்சி மிக்கதாக மாற்றி விடுகிறது. மேலும் வேர்க்கால்களில் சுரக்கும் சீபம் மற்றும் ஈரப்பதத்தை குறைத்து தலைமுடியின் வலுவை குறைத்து விடுகிறது. இதன் காரணமாக அரிப்பு, எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 89

    ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

    தலை முடி உதிர்வு : ஹேர் ஜெல்கள் தலையில் வறட்சியை உண்டாக்குவதால் அவை நமது தலைமுடியின் அடர்த்தியை குறைத்து, தலை முடி உதிர்வதற்கு காரணமாகிறது. மேலும் அதில் கலந்துள்ள வேதிப்பொருட்களை பொருத்தும் சில ஹேர் ஜெல்கள் நமது தலையில் உள்ள இறந்த செல்களோடு வேதிவினை புரிந்து தலை முடி உதிர்வதை அதிகரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 99

    ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?

    பொடுகு : தினசரி நாம் ஹேர் ஜெல் பயன்படுத்தும் போது அவை கண்டிப்பாக நமது தலை முடியையும் வேர்க்கால்களையும் பாதிக்கும். தினசரி ஹேர் ஜெல் பயன்படுத்தும் போது நமது தலையில் இயற்கையாகவே சுரக்கும் எண்ணெய் பசைகளுடன் வேதி வினைபுரிந்து பொடுகுகள் உண்டாக வழி செய்கிறது. மேலும் பொடுகுகள் உண்டாவதால் அரிப்பு எரிச்சல் ஏற்படலாம்.

    MORE
    GALLERIES