சரும பாதுகாப்பு என்பது உடல் நலத்தை போன்றே கவனம் செலுத்தக்கூடிய ஒன்றாகும். மாறிவரும் வாழ்க்கை சூழல் காரணமாக பலவற்றை நாம் சரிவர செய்வதில்லை. இதனால் பாதிக்கப்பட கூடிய விஷயங்களில் நமது சருமமும் ஒன்று. தவறான உணவு முறை, தேவையற்ற அழகியல் புராடக்ட்கள், அதிக மாசுபாடு போன்ற காரணங்களாலும் முக அழகு பாதிக்கப்படுகிறது. இழந்த முக அழகை பெறுவதற்கு பிபி கிரீம் போன்ற முகப்பூச்சு புராடக்ட்களை பயன்படுத்துவோம்.
பிபி கிரீம் என்பவை சருமத்தின் நிறத்தை சீராக மாற்றுவதற்கு பயன்படுகிறது. உங்கள் சருமத்தில் எதாவது கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை இருந்தாலும் அவற்றை சரி செய்ய இது வழி செய்கிறது. மேலும் இதை பயன்படுத்தி இயற்கையான "நியூட் மேக் அப்" தோற்றத்தை பெற முடியும். பெரும்பாலான பிபி க்ரீம்கள் மற்ற கிரீம்களை விட நமது முகத்தை பாதுகாக்க உதவும். அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் SPF போன்ற முக்கிய மூலப்பொருட்கள் BB கிரீம்களில் உள்ளது.
இதை பயன்படுத்தி வந்தால் தோலை ஈரப்பதமாகவும், நீரேற்றமாகவும் மற்றும் பருக்கள் அற்ற தோற்றத்தையும் தர செய்யும். இத்துடன் உங்கள் சருமத்தை பொலிவாகவும், மென்மையாக்கவும் உருவாக்க பிபி கிரீம்கள் வழி செய்கிறது. தாவர ஸ்டெம் செல்கள் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் போன்றவற்றை கொண்டு இந்த கிரீம்கள் தயாரிக்கப்படுகிறது. இது செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் பழைய செல்களை மீளுருவாக்கம் செய்கிறது.
இவற்றை பயன்படுத்துவதால் தோலிற்கு அடியில் இருந்து ஊட்டமளித்து இழந்த சரும அழகை மீண்டும் பெற வைக்கிறது. அறிவியல் பூர்வாமாகவும் இந்த பிபி கிரீம்கள் சிறந்தவை என்று நிரூபணம் ஆகியுள்ளது. நீங்கள் வாங்க கூடிய பிபி கிரீம்களில் தாவர ஸ்டெம் செல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இந்த வகை பிபி கிரீம்கள் அதிக பொலிவை தராமல் இருந்தாலும் தோலின் உள்ளிருந்து தோலின் நிறத்தை சில வாரங்களிலேயே மேம்படுத்த உதவுகிறது.
பிபி கிரீம்களை தினசரி பயன்படுத்தி வரலாம். குறிப்பாக வேலை நேரங்களில் தங்களின் முக அழகை பராமரிக்க நேரம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த புராடக்ட்டாகும். மேலும் நீங்கள் வாங்க கூடிய பிபி கிரீம்களில் SPF உள்ளதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அப்போது தான் உங்களின் முகம் வெயிலின் பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கப்படும். பொதுவாக இந்த பிபி கிரீம்களில் பெரிய அளவிற்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மற்ற கிரீம்களை போன்று உங்களின் சருமத்தை சேதப்படுத்தாமல், இயற்கை அழகை தருவதற்கு இது உதவுகிறது.