கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் திட்டமிட்டபடி திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட பல சுப காரியங்கள் விமரிசையாக திட்டமிடப்பட்டு நடந்து வருகின்றன. எனவே நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க பெண்கள் பியூட்டி பார்லருக்கு படையெடுத்து வருகின்றனர். அப்படி செல்லும் பல பெண்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பது கடினமாக உள்ளது. மேலும் சிலர் தொற்று அச்சம் காரணமாக பார்லர்கள் மற்றும் சலூன்களுக்கு சென்று தங்களை அழகுபடுத்தி கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
தோலழகில் கவனம்: பளபளப்பான மிருதுவான சருமத்தை பெற, தோலில் உள்ள அனைத்து மந்த தன்மை மற்றும் தளர்ச்சியை நீக்க வேண்டியது அவசியம். வெவ்வேறு தோல் பராமரிப்புப் பொருட்கள் மூலம் உங்கள் சருமத்தை அழகுபடுத்துங்கள். உங்கள் ஸ்கின் டைப்புக்கு ஏற்ற மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டிங் சீரம் பயன்படுத்தி இதை தொடங்கவும். மென்மையான சருமத்தை பெற க்ளீன்சிங், டோனிங் மற்றும் சீரம்களை பயன்படுத்துதல் மற்றும் சருமத்தை ஈரப்பதமாக்குதல் உள்ளிட்டவற்றை செய்யலாம்.
ஃபேஸ் மாஸ்க் (Face masks) பயன்படுத்துங்கள்: பொதுவாக ஃபேஸ் மாஸ்க் தயாரிப்புகள் நிகழ்ச்சிகளுக்கு தயாராக நேரம் இல்லாத போது லாஸ்ட் மினிட் பியூட்டி ரொட்டீனுக்கு சிறந்த ஒன்றாக இருக்கின்றன. ஃபேஸ் மாஸ்க்ஸ் சருமத்தை ஹைட்ரேட்டாக வைக்க, சருமத்திலிருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்க மற்றும் துளைகளின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் சில நிமிடங்களிலேயே உங்கள் முகத்தில் அழுக்கையும் நீக்குகின்றன. எண்ணெய் சருமத்திற்கான க்ளே ஃபேஸ் மாஸ்க்ஸ், முகப்பரு மற்றும் பருக்களுக்கு கிரீன் டீ மற்றும் டீ ட்ரீ மாஸ்க்ஸ் மற்றும் சாதாரண அல்லது வறண்ட சருமத்திற்கு ஹைட்ரேடிங் ஷீட் மாஸ்க்ஸ் உள்ளிட்ட பல தயாரிப்புகள் உள்ளன. இதில் உங்கள் தோல் வகைக்கு ஏற்ற பொருத்தமான மாஸ்க்கை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
தலைமுடியை கண்டிஷனிங் செய்யுங்கள்: ஃபிரெஷ் மற்றும் சாஃப்ட் தலைமுடி உங்களுக்கான நல்ல நாளை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தலைமுடிக்கு நல்ல ஹேர் மாஸ்க்ஸ் மற்றும் கண்டிஷனர்கள் மூலம் சிறந்த பராமரிப்பை கொடுங்கள். ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்துவதில் தொடங்கி, மென்மையான ஷாம்பூவில் தலைமுடியை அலசவும்.
தூக்கம் & தண்ணீர்: நீங்கள் நாளை ஒரு ஃபங்ஷனுக்கு செல்வதாக இருந்தால் இன்று இரவு நல்ல நிம்மதியான தூக்கம் மற்றும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள தினசரி தண்ணீர் அளவை பின்பற்றினால் நல்ல பலனை காணலாம். உங்கள் உடலுக்கு சரியான அளவு தூக்கம் மற்றும் தண்ணீரை அளிப்பதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியுடனும், இயற்கையாகவே சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.
சரியான மேக்கப் வழக்கத்தில் கவனம்: கடைசி நேர அழகு செயல்முறைகள் முகம் பொலிவுடன் இருக்க, சரியான மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதும் மிக அவசியம். உங்கள் முக சருமம் போதுமான அளவு ஈரப்பதமாக இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சீரான டோனை பெற CC கிரீம்களைப் பயன்படுத்தவும். ப்ளஷ், லிப்ஸ்டிக் மற்றும் ஹைலைட்டருடன் ஃபினிஷிங் டச் கொடுக்கவும்.