காஸ்மெடிக்ஸ் அல்லாத காலத்திலிருந்தே அழகுக் குறிப்பிற்காக பயன்படுத்தக்கூடிய பொருட்களில் பச்சை பயறுக்கும் முக்கிய இடம் உண்டு. இது பலவகையான அழகு சார்ந்த பிரச்னைகளுக்கும் உதவக் கூடியது. எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?
2/ 5
ஃபேஸ் பேக் : ஒரு கைப்பிடி பச்சை பயறை இரவு பாலில் ஊற வைத்து மறுநாள் காலை அதை அரைத்து முகம், கழுத்து கைகள் என அப்ளை செய்து 15-20 நிமிடங்கள் ஊறியதும் கழுவுங்கள். இவ்வாறு செய்ய முக வறட்சி நீங்கி மென்மையான, பளபளக்கும் முகத்தைப் பெறலாம்.
3/ 5
பருக்கள் நீங்க : பருக்கள் உடைந்து அதனால் எரிச்சல், பருக்கள் பரவுதல் என இருந்தால் இரவு பாலில் பச்சை பயறை ஊற வையுங்கள். மறுநாள் காலை அரைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின் 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ பருக்கள் இல்லா முகமாக மாறும்.
4/ 5
சூரியக் கருமை நீங்க : இரவு பச்சை பயறை ஊற வைத்து மறுநாள் அதை அரைத்து குளுர்ச்சியான தயிர், கற்றாழை சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவுங்கள். முகம் கருமை நீங்கி மென்மையாக மாறும்.
5/ 5
தலை முடி வளர்ச்சி : பச்சை பயறை வேக வைத்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதில் முட்டை வெள்ளை மற்றும் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்குக் கலந்து தலைமுடி வேர்களில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்துவிடுங்கள். வாரம் இரண்டு முறை செய்ய இதன் பலன் தெரியும்.