ஆரஞ்சு பழம் இயற்கையாகவே உடலுக்கு பலவகையான நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக அதன் பலமே விட்டமின் சி தான். ஆனால் அது பழத்தைக் காட்டிலும் தோலில்தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் கசப்புத் தன்மையால் சாப்பிட முடியாது. இருந்தாலும் அதை வேஸ்ட் செய்யாமல் இப்படி அழகுப் பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு தோல் பொடி நன்மைகள் : ஆரஞ்சு தோலின் முன்பே சொன்னது போல் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. அதோடு முகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆற்றலும், இளமையுடன் வைத்துக்கொள்ளும் சக்தியும் உண்டு. முகப்பரு, கீரல், பரு தடையங்கள், திட்டுக்கள் என முகத்தில் எது இருந்தாலும் நீக்கிவிடும். ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் கிருமிகள், இறந்த செல்களால் சரும சேதாரத்தையும் தடுக்கும்.