சினிமாத்துறையில் இருப்பவர்கள் பொதுவாக ஷூட்டிங்கிற்காக பல இடங்கள் செல்ல வேண்டியிருக்கும்.அப்படி செல்லுகையில் அலைச்சல் மற்றும் இடம் மாற்றம் காரணமாக அவர்களின் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.எனவே அவர்கள் தங்களின் சருமம் மீது அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தங்கள் சருமத்தினை சற்றும் அதிகமாக பராமரிப்பார்கள்.அந்த வகையில் என்றும் பலப்பல சர்மத்துடன் இருக்கும் நடிகை சமந்தா தனது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறார் தெரியுமா ?
நடிகை சமந்தா தனது முகம் மற்றும் தலைமுடியை பாதுகாக்க அதிகமாக கவனம் செலுத்துகிறார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.சில மாதங்களுக்கு முன்பு தனது அழகிய சர்மத்திற்கான ரகசியம் பற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அது என்னவென்றால்,ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் வைத்து தலையில் டவலை கட்டிக்கொண்டு நீராவி பிடிப்பது தான் என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை சமந்தா ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு தினமும் காலையில் ஆப்பிள் சிடர் வினிகரை முகத்திற்கு பயன்படுத்துகிறார்.ஆப்பிள் சிடர் வினிகரில் எல்லா வினிகர்களையும் போலவே வைட்டமின்கள், கனிம உப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.எனவே சருமத்தை ஆரோயக்கியமாக வைத்திருக்க ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.
முகத்தை பாதுகாக்க மிகவும் முக்கியமானது என்றால் அது சன் ஸ்கிரீன் தான்.இது சூரிய ஒளியில் உள்ள புறஊதா கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுக்காக்கின்றன. அதிகமான வெயில் நேரத்தை பயன்படுத்தக்கூடிய சன் ஸ்கிரீன், வீட்டில் இருக்கும் போது பயன்படுத்தக்கூடிய சன் ஸ்கிரீன் என இப்படி பல சன் ஸ்கிரீன் வகைகள் உள்ளது.இதில் நமக்கு ஏற்றது போல நாம் தேர்ந்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.அந்த வகையில் நடிகை சமந்தாவின் ஸ்கின் கேர் ரொட்டீனில் சன் ஸ்கிரீன் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.