கொஞ்சமாக எடுத்து பயன்படுத்தினாலும் பேக்கிங் சோடாவின் பலன்கள் ஆச்சரியம் தர தகுந்த வகையில் பெரியதாக இருக்கும். வீட்டில் தரைகளை சுத்தம் செய்வதற்கும், துர்நாற்றத்தை போக்குவதற்கும், கரைகளை நீக்குவதற்கும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. இதனை நம் சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை தரக் கூடும்.
பேக்கிங் சோடா மாஸ்க் : பருக்களை தடுக்கும் விதமாக பேக்கிங் சோடா கொண்டு நாம் ஃபேசியல் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம். ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள்ஸ்பூன் அளவு ஓட்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு ரோஸ்வாட்டர் கலந்து கொள்ளவும். இந்த மாஸ்கை உங்கள் முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். வாரம் இரண்டு முறை இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு ஜூஸ் மற்றும் பேக்கிங் சோடா : இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொண்டு, அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு, பின்னர் 10 நிமிடம் காத்திருக்கவும். வாரம் ஒருமுறை இதை பயன்படுத்தினாலே போதுமானது. உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பிரகாசமாக மாறும். அத்துடன் வயது முதிர்வு அறிகுறிகள் குறையத் தொடங்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா : முகத்தில் கருப்பு சுவடுகள், பருக்களின் வடுக்கள் போன்றவை இருப்பின் அதற்கு எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா கலவையை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா தலா ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து பேஸ்ட் போல மாற்றவும். உங்கள் முகத்தில் 2 நிமிடம் மசாஜ் செய்து விட்டு குளிர்ச்சியான நீரில் கழுவிக் கொள்ளவும். இதுபோல செய்தால் முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.