

தாடி வளர்புது ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். ஆனால் இந்த வெப்பம் மிகுந்த கோடையில் தாடியை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் நிறைய கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை காரணமாக தாடியில் நிறைய அழுக்குகளும் தூசியும் குவிக்கிறது. இது உங்கள் தாடி முடிகளை கடுமையானதாகவும் பலவீனமாகவும் மாற்றிவிடும்.


இதன் காரணமாகவே பெரும்பாலான ஆண்கள் கோடை காலத்தில் தாடி வளர்ப்பதை தவிர்க்கின்றனர். ஆனால் கோடையில் நீங்கள் தாடியை நல்ல முறையில் பராமரிக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் தாடியை ஒழுங்காக கழுவி மாய்ஸ்ச்சரைசிங் செய்வதன் மூலம் கூடுதல் கவனிப்பைக் காட்ட வேண்டும். நாள் முழுவதும் உங்கள் தாடியை பராமரிக்க உதவும் சில யோசனைகள் குறித்து காண்போம்.


1. டிரிம்மிங் (regular trim) : கோடைகாலத்தில் உங்கள் தாடியைப் பராமரிப்பதற்கான மிக முக்கியமான மற்றும் ஆரோக்கியமான வழிகளில் ஒன்று டிரிம்மிங், ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தாடியை பராமரிப்பது என்பது மிகவும் எளிதானது, விரைவானது மற்றும் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும்.


2. எண்ணெய் தேய்த்து அலசவேண்டும் (Oiling and scrubbing) : தாடி முடியின் பிரகாசத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், அவை மெலிந்து போவதை தவிர்ப்பதற்கும் வாரம்தோறும் உங்கள் தாடியில் எண்ணெய் தடவுவது மிகவும் அவசியம். எந்தவொரு வகை பாக்டீரியாக்களையும் உங்கள் முகத்திலிருந்து விலக்கி வைக்க வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் தாடியை ஷாம்பு அல்லது சோப்பு போட்டு அலசுவது அவசியம்.


3. மாயிஸ்சரைசர்: (Moisturise) : தாடியை நன்கு கழுவி அதனை மாய்ஸ்சரைசர் செய்வதன் மூலம் தாடி எப்படி இருக்கிறதோ அப்படியே பராமரிக்க முடியும். மேலும் தாடி வளர்ச்சி அதிகரிக்கிறது. பலருக்கு தாடி முடிகள் கரடு முரடாக சிக்கல் விழுந்தது போல பின்னிக்கு கொள்ளும். அதுவே உங்கள் தாடியை மாய்ஸ்ச்சரைசர் செய்வதன் மூலம் தாடி மென்மையாவதால் தாடியை எளிதில் பிரிக்க முடியும்.


4. நீர் உட்கொள்ளலை அதிகரிக்கவும்: (Increase your water intake): தாடி வளர்ப்பில் சரியான உணவை உட்கொள்வதும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம். அதிலும் புரதச்சத்து நிறைந்த உணவை ஒருவர் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் வறண்ட காலநிலையில் சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.


5. சன்ஸ்கிரீன் தடவவும் (Apply sunscreen underneath your beard): உங்கள் தாடியில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால் கடுமையான சூரியக் கதிர் முடியில் அடியில் ஸ்ப்ளிட் எண்ட்ஸை விட்டுச்செல்கிறது. இதனால் அது வறண்டு, உடையக்கூடியதாக இருக்கும். சன்ஸ்கிரீன் பயன்பாடு உங்கள் தாடியை சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் முடியை மென்மையாக்குவதோடு, பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.