தங்களது சருமத்தை அழகாக்க மற்றும் பராமரிப்பதில் மெனங்கொடும் பெண்கள் நிச்சயம் அழகு நிலையங்களுக்கு சென்று கை, கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு வேக்சிங் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் கொரோனா தொற்று அத்தனையும் மாற்றிவிட்டது. கொரோனா சமயத்தில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்த நிலையில், தங்களது சருமத்தைப் பராமரிக்க வீட்டிலேயே பியூட்டி பொருள்களைப் பயன்படுத்தி தங்களை அழகாக்க முயற்சித்தார்கள். இந்த நிலைத் தான் பெரும்பாலும் தற்போதும் தொடர்ந்து வருகிறது.
இதுப்போன்று நீங்களும் வீட்டிலேயே சருமத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கு வேக்சிங் செய்கிறீர்கள் என்றால் கவனமுடன் இருக்க வேண்டும். நீங்கள் முதல் முறை வீட்டிலேயே வேக்சிங் செய்கிறீர்கள் என்றால், அழகு கலை நிபுணரின் ஆலோசனைப் பெற்று மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு நீங்கள் வீட்டில் வேக்சிங் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..
வேக்சிங் செய்யும் போது மெதுவாக நீக்குதல்: உங்களது கை அல்லது காலில் வேக்சிங் செய்கிறீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு வலி ஏற்படும்.எனவே க்ரீம்களை அப்ளே செய்து நீங்கள் வேக்சிங் செய்யும் போது மெதுவாக அதனை உரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வலி குறைவதுடன் முடி சரியாக அகற்றப்படும். ஒருவேளை நீங்கள் வேகமாக அகற்றுகிறீர்கள் என்றால் வலி ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
புண்கள் இருந்தால் வேக்சிங் செய்யக்கூடாது: உங்களது சருமத்தில் சிராய்ப்புண் கொண்ட வெட்டுக்காயங்கள் இருந்தால் வேக்சிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் வேக்சிங் செய்யும் போது ஏற்கனவே தோலின் சேதமடைந்துள்ள பகுதி மிகவும் பாதிப்புக்குள்ளாகும். எனவே காயம், புண், சிராய்ப்புகள் இருந்தால் சரியாகும் வரை வேக்சிங் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
வேக்சிங்கை சரியான வெப்பநிலையில் பயன்படுத்துதல்: வேக்சிங்கை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னர் வெப்பநிலையை சரியாக பராமரிக்க வேண்டும். மிகவும் குளிர்ச்சியான நேரத்தில் நீங்கள் வேக்சிங் பயன்படுத்தும் போது உங்களது வேக்சிங் க்ரீம் சருமத்தில் திறம்பட ஒட்டாது. மற்றும் வேக்சிங் கட்டியாக இருக்கும். எனவே அறை வெப்பநிலையில் 5-7 நிமிடங்களில் வைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.
வேக்சிங் செய்யும் போது தோல் பராமரிப்பு: சருமத்தில் அழுக்கு,வியர்வை போன்றவை இருக்கும் சமயத்தில் வேக்சிங் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். அல்லது ஈரத்துணியால் நன்றாக துடைத்துவிட்டு நீங்கள் க்ரீம் அல்லது ஜெல்லைப் பயன்படுத்தி செய்ய வேண்டும். இது உங்களது சருமத்தில் உள்ள முடியை விரைவாக அகற்ற உதவியாக இருக்கும்.