மேக்கப் என்பது உங்கள் அழகை மேம்படுத்துவதற்கான ஒரு வழி மட்டுமல்ல, உங்கள் கிரியேட்டிவிட்டி அதாவது படைப்பாற்றலைக் காட்டுவதற்கான ஒரு நல்ல வழியும் கூட. இருப்பினும் உங்கள் சருமத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத மேக்கப் போடுவதால் அது உங்கள் தோற்றத்தின் மீது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். அன்றாடம் மேக்கப்பில் செய்யும் தவறுகளை பலர் அறியாமலேயே இருக்கிறார்கள். ஒருநாள் கூட மேக்கப் போடாமல் சிலர் வெளியே செல்ல மாட்டார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கேற்ற சரியான மேக்கப் செய்து கொள்கிறார்களா என்று பார்த்தால் நிச்சயம் கிடையாது. ஏனென்றால் மேக்கப் விஷயத்தில் ஒருவர் தனது முகத்திற்கு ஏற்ற மேக்கப் ஷேடோ மற்றும் பிராண்டுகளை கண்டறிந்து பயன்படுத்த துவங்குவதே சவாலான ஒன்று.
மேக்கப் போட்டு கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பலர் தினமும் மேக்கப் செய்து கொள்கிறார்களே தவிர, நமது உருவம் மற்றும் முகத்திற்கேற்ற மேக்கப் செய்து கொள்ள வேண்டும் என்பதில் சிலர் ஆர்வம் காட்டுவதில்லை அல்லது அவர்களுக்கு சரியான மேக்கப் செய்ய தெரியவில்லை. ஆனால் உண்மையில் சொல்ல போனால் மேக்கப்பை முழுமையாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நீங்கள் தவிர்க்க சில பொதுவான மேக்கப் தவறுகளை இங்கே பார்க்கலாம்..
நீங்கள் வறண்ட சருமம் கொண்டவரா? : நீங்கள் வறண்ட சருமம் கொண்டவராக இருந்து மேக்கப்பைப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் சருமம் மேக்கப்பை மிக வேகமாக உறிஞ்சி, நிறைய சுருக்கங்களை உருவாக்கலாம். எனவே உங்கள் சருமத்திற்கு எவ்வாறு ஊட்டமளிக்கலாம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஊட்டமளிப்பது என்பது சரும மேல்தோலின் செல்களை மீளுருவாக்கம் செய்வது. முடிந்தால் இரவு நேரத்தில் மட்டுமே ஆழமான ஊட்டமளிக்கும் கிரீமை (nourishing cream) பயன்படுத்தலாம்.
அதிகப்படியான ஃபவுன்டேஷனை பயன்படுத்துதல்: அதிகப்படியான ஃபவுன்டேஷன் உங்கள் முகத்திற்கு எந்த நன்மையும் செய்யாது. இதனால் சருமம் மிகவும் க்ரீக்கியாக காட்சியளிக்கும். மேலும் சிறிது நேரத்திலேயே முகத்தில் நிறைய கோடுகள் உருவாகத் தொடங்கும். எனவே அதிகப்படியான ஃபவுன்டேஷனை பயன்படுத்தாதீர்கள். அதே போல முகத்தில் ஃபவுன்டேஷநாய் பயன்படுத்தும் முன் நன்கு கலந்த பின் பயன்படுத்த வேண்டும்.
தவறான லிப்ஸ்டிக் ஷேட்: லிப்ஸ்டிக்கின் சில ஷேட்கள் உங்களக்கு சூட் ஆகாது. உங்களுக்கு செட்டாகாத லிப்ஸ்டிக் ஷேட் பயன்படுத்துவது உங்களை வயதானவராக தோன்ற செய்யலாம். உதாரணமாக, நீலம் அல்லது ஊதா நிற சாயல் இல்லாத மஞ்சள், சிவப்பு மற்றும் ஊதா நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் அது உங்களை முதுமையானவராக காட்டும்.