முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

Summer skincare tips: பொதுவாக கோடை காலத்தில் பெண்கள் தங்களின் சருமத்தை பாதுகாக்க ரோஸ் வாட்டர் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், கோடைகாலத்தில் சருமத்தை பராமரிக்க சிறந்த பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இது தோல் டோனர் மற்றும் சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதன் பலன்களை பெற சரியான நேரத்தில் சரியான முறையில் அவற்றை பயன்படுத்த வேண்டும்.

 • 18

  கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

  பெரும்பாலும் நாம் அனைவரும் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். ஆண், பெண், நேரம், காலம் என எந்த ஒரு நிபந்தனைகளும் ரோஸ் வாட்டர் பயன்படுத்த இல்லை. எனவே, சரும பாதுகாப்புக்கு பெரும்பாலானோரின் தேர்வாக ரோஸ் வாட்டர் உள்ளது. குறிப்பாக, பெண்களின் தோல் பராமரிப்பு சாதனங்களில் ரோஸ் வாட்டர் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதும் கோடையில் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் இது முதலிடத்தில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 28

  கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

  என்னதான் பெரும்பாலானோர் ரோஸ் வாட்டரை பயன்படுத்தினாலும், இதன் முழுமையான பயனை பெற அதை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும் என தெரியாது. கோடை காலத்திலும் நீங்கள் பளிச்சென்று மிளிர ரோஸ் வாட்டர் சிறந்த தேர்வு. ரோஸ் வாட்டரை சருமத்தில் பயன்படுத்த சரியான நேரம் எது தெரியுமா?. இல்லை என்றால், இதற்கான பதிலை உங்களுக்கு நாங்கள் கூறுகிறோம். ஏனென்றால், குறிப்பிட்ட சில நேரங்களின் ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் அதன் பலன் இரண்டு மடங்கு நமக்கு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 38

  கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

  ரோஸ் வாட்டர் தடவ சரியான நேரம் எது? : ரோஸ் வாட்டரின் முழு பயனை பெற, தினமும் இரவில் படுக்கும் முன் ரோஸ் வாட்டரை பருத்தி உருண்டையின் உதவியுடன் உங்கள் சருமத்தில் தடவலாம். இதையடுத்து, காலை எழுந்தவுடன் முகத்தை சுத்தப்படுத்தியதும் ரோஸ் வாட்டரை ஃபேஸ் டோனராக பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 48

  கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

  ரோஸ் வாட்டர் இயற்கையாகவே சருமத்திற்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. இது சரும செல்களில் ஊடுருவி, சருமத்தை குளிர்விக்க செய்கிறது. மேலும், தொடர்ந்து ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் pH அளவு பராமரிக்கப்படுகிறது. இது முகப்பரு மற்றும் வீக்கம் போன்ற பல சரும பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

  MORE
  GALLERIES

 • 58

  கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

  ரோஸ் வாட்டர் நிறமி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இவற்றை கோடைக்காலத்தில் பயன்படுத்துவது சிறந்தது. ரோஸ் வாட்டருடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து பயன்படுத்தி வந்தால், சரும கருமை பிரச்சனைகளை சரி செய்யலாம். இது தவிர, சருமம் சிவத்தல் மற்றும் கருமையான திட்டுகளை நீக்கி சருமத்தின் அழகை மேம்படுத்தவும் இது உதவும்.

  MORE
  GALLERIES

 • 68

  கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

  இரவில் படுக்கும் முன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவதால், சன் டேனை எளிதாகக் குறைக்கலாம். ரோஸ் வாட்டர் சருமத்தை ஈரப்பதமாக்கி, சருமத்தின் ஈரப்பதத்தை அப்படியே தக்கவைக்கும். இதன் காரணமாக சரும வறட்சி குறையும்.

  MORE
  GALLERIES

 • 78

  கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

  சன் ப்ரொடெக்டர் : ரோஸ் வாட்டரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளது. ரோஸ் வாட்டரை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமம் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்க ஆரம்பிக்கும். சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

  MORE
  GALLERIES

 • 88

  கோடை வெயிலிருந்து சருமத்தை பராமரிக்க ரோஸ் வாட்டர் ஸ்பிரே போதும்.. எதையும் சமாளித்துவிடலாம்..!

  இயற்கையான டோனர் : ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த சரும டோனராக உள்ளது. வெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு, ரோஸ் வாட்டரை டோனராகப் பயன்படுத்துவதன் மூலம், முகம் சுத்தமாவதுடன், அழுக்கு மற்றும் சூரிய துகள்களை எளிதில் அகற்றலாம். ( குறிப்பு : இந்தக் கட்டுரை பொது நம்பிக்கை மற்றும் இணையத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.).

  MORE
  GALLERIES