பாலிவுட்டில் நடிகை, தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பும் இந்திய அணியின் வீரரான விராத் கோஹ்லியை மயக்கிய பேரழகி. திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் உடல் எடையை கடுமையான டயட் முறைகள் மூலமாக பராமரித்து வரும் அனுஷ்கா சர்மா, முகத்தை பிரகாசத்துடன் பராமரிக்க எப்போதும் இயற்கையான பொருட்களை மட்டுமே நம்பி இருக்கிறார்.
அவ்வளவு தான் அனுஷ்கா சர்மா பயன்படுத்தும் ஃபேஸ் பேக் இப்போது உங்கள் கைகளுக்கும் வந்துவிட்டது. இந்த கலவையை முகத்தில் வழக்கமாக ஃபேஸ் பேக் அப்ளே செய்வது போல் பூசிக்கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் போதும், முகத்தில் மெல்ல மெல்ல பொலிவு எட்டிப்பார்க்க ஆரம்பிப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
வேப்பிலை கிருமிநாசினியாக பயன்படக்கூடியது இது முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள், தழும்புகளும், வடுக்கள், அம்மை புண்கள், வெண்புள்ளிகள் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த வேப்பிலை அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது, எண்ணெய் சருமம் கொண்டவர்கள் 2 டீஸ்பூன் வேப்பிலை பொடியுடன் 4 டீஸ்பூன் கெட்டித்தயிர் கலந்து பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலையுடன் தேன், நெய், வெண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து பயன்படுத்தலாம்.