முடி நரைப்பது, சருமம் முதிர்ச்சி அடைவது உள்ளிட்டவற்றின் காரணமாக நடுத்தர வயதில் இருக்கும் பலர் வயதான தோற்றத்தில் இருக்கின்றனர். எனவே சீக்கிரம் முதுமை வரும் பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள சீரான மற்றும் ஆரோக்கியமான டயட் பிளானை (anti-aging diet) பின்பற்றுவது அவசியமாகிறது. ஆன்டி-ஏஜிங் டயட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகள் அடக்கம். இவை முக்கிய உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன. சருமத்தை புத்துயிர் பெற உதவும் உணவுகளின் பட்டியல் கீழே..
தண்ணீர்: உடலை எப்போதுமே ஹைட்ரேட்டாக வைத்திருப்பது சருமத்தை ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களின் உடல் நீண்ட காலமாக ஆயில் விடாத ஒரு இயந்திரம் போன்றது. எளிமையாக சொன்னால் போதுமான தண்ணீர் இல்லாத நிலையில் நம் உடல் சரியாக இயங்காது. இது கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தும். உங்களுக்கு தாகமாக இல்லாவிட்டாலும் எப்போதுமே உங்கள் உடல் ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ப்ரோக்கோலி: ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருக்கிறது ப்ரோக்கோலி. இதில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் சி கொலாஜனை உருவாக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள முக்கிய புரதம் தான் கொலாஜன். இது சருமத்திற்கு வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
ரெட் ஒயின்:ரெட் ஒயின் கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என்று நியூயார் கூறுகின்றனர். பாரம்பரிய ரெட் ஒயின்கள் 3 வாரங்களுக்கு மேல் புளிக்க வைக்கப்படும் திராட்சையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த திராட்சைகள் அவற்றின் தோல்கள் மற்றும் விதைகளுடன் புளிக்க வைக்கப்படுகின்றன.இது உண்மையில் ரெஸ்வெராட்ரோலின் அதிகபட்ச அளவைப் பிரித்தெடுக்க உதவுகிறது. எனவே வயதாகும் அறிகுறிகளை தடுக்க மிதமான அளவு ரெட் ஒயின் அருந்த கூறப்படுகிறது.
பப்பாளி: சுருக்கமில்லாத சருமத்தை பெற விரும்பினால் உங்கள் டயட்டில் பப்பாளி நிச்சயம் இருக்க வேண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அதிகம் உள்ள பப்பாளி, சருமத்தை மிருதுவாக்க உதவுகிறது. மேலும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுவதன் மூலம் சருமத்தை பிரகாசிக்க உதவுகிறது. மேலே கண்டஉணவுகளுடன் கூடுதலாக மாதுளை, அவுரிநெல்லிகள், அவகேடோ உள்ளிட்ட பிற பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உட்கொள்வது எதிர்பார்க்கும் பலன்களை அளிக்கும். டார்க் சாக்லேட்டை மிதமாக எடுத்து கொள்ளும் போது, ஆன்டி-ஏஜிங்கிற்கு உதவுகிறது. கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள் எடை இழப்பு மற்றும் பிரகாசமான சருமம் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகின்றன.