இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவதாரம் எடுத்துள்ளார் பூஜா ஹெக்டே. முக்கியமாக இந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததின் மூலம் தென்னிந்தியாவின் மிகவும் பேசப்படும் கதாநாயகிகளுள் ஒருவராக பூஜா ஹெக்டேவும் இடம் பெற்றுள்ளார். பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பதாகவும் ரசிகர்கள் பலர் பூஜா ஹெக்டேவை வர்ணித்து வருகின்றனர். இப்படி தேவதை போல் அழகாக இருக்கும் பூஜாவின் அழகிற்கான காரணங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
வீட்டில் தயாரித்த ஃபேஸ் பாக்குகள் : பூஜா ஹெக்டே தனது வீட்டிலேயே மஞ்சள் மற்றும் கிரீம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கை தினம் தோறும் பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் அவரது சருமம் இயற்கையாகவே பொலிவுடன் காணப்படுகிறது. மேலும் வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாமலும் பார்த்துக் கொள்கிறார்.
மேக்கப் போடுவதில்லை : பூஜா ஹெக்டே தனது சினிமா சூட்டிங் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் மேக்கப் போடுவது இல்லையாம். மேக்கப் போடும்போது அதில் உள்ள வேதிப்பொருட்களின் காரணமாக சருமம் வெகுவாக பாதிப்படையும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதன் காரணமாகவே பெரும்பாலான நேரங்களில் தனது இயற்கையான சரும பராமரிப்பு முறைகளை மட்டுமே அவர் மேற்கொண்டு வருகிறார்.