முகத்தை சுத்தமாக வைத்திருப்பது என்பது ஸ்கின் கேரில் முக்கியமான ஒன்று.அதைத் தான் நிதி அகர்வாலும் பின்பற்றுகிறார்.அவர் மருத்துவர் பரிந்துரைத்த கிளென்சரை பயன்படுத்தி தினமும் காலையில் தனது முகத்தை சுத்தம் செய்கிறார். நீங்கள் எளிமையான கிளென்சராக வீட்டில் இருக்கும் பச்சை பாலை கூட பயன்படுத்தலாம். அது முகத்தில் இருக்கும் அழுக்கை முற்றிலும் நீக்கிவிடும்.
சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும்.நடிகை நிதி அகர்வால் மாய்ஸ்சுரைசரை ( moisturizer )தவறாமல் பயன்படுத்துகிறார். மாய்ஸ்சரைசரை மேக்கப் அப் போடுவதற்கு முன் பயன்படுத்தலாம். பின்பு மேக்கப்பை ரிமூவ் செய்த பின்பும் பயன்படுத்தலாம்.ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை கூட மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்.
முகத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்க அடிக்கடி மசாஜ் செய்ய வேண்டும். கைகளால் மசாஜ் செய்வதை விட தற்போது ஜேட் ரோலர் என்பதை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.ஆம். நிதி அகர்வாலும் முகத்தில் க்ரீம் அப்ளை செய்துவிட்டு ஜேட் ரோலரை வைத்து மசாஜ் செய்கிறார்.இது முகத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்கி உங்கள் முகத்தை பளப்பளக்க வைக்கும்.