கரி என்றால் அடர் கருப்பு நிறத்தில் இருக்கக் கூடிய பொருள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த கருப்பு நிறம் கொண்ட பொருளை வைத்து உங்கள் முகத்தை பிரகாசமாக மாற்ற முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உண்மைதான், கரித்தூளை இதர பொருட்களுடன் சேர்த்து பேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தினால் நம் முகம் வசீகரம் கொண்டதாக மாறும்.
முகத்தில் அழுக்கு, நச்சு போன்றவை சேர்ந்திருக்கும். அவைற்றையெல்லாம் நீக்குவதற்கான எளிய வழிமுறைகளில் ஒன்று கரி பேஸ் மாஸ்க் ஆகும். இது சருமத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. வீட்டில் நாமே தயாரிக்கின்ற கரி பேஸ் மாஸ்கை காட்டிலும் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு சிறப்பான ஒன்று வேறெதுவும் இருக்க முடியாது.
ஆக்டிவேடட் சார்கோல் என்றால் என்ன? வழக்கமான கரித் துண்டை எடுத்து, அதை சூடுபடுத்தும்போது மனம் இல்லா கருப்பு நிற தூளாக அது மாறும். அதுதான் ஆக்டிவேடட் சார்கோல் ஆகும். அதிக வெப்பத்தில் கரித்துண்டுகளை சூடேற்றம் செய்யும்போது, அதில் உள்ள நுண்ணிய துளைகள் வெளியாகி நச்சுக்களை உறிஞ்சும் திறன் கொண்டதாக மாறுகிறது.
கற்றாழை மற்றும் கரித்தூள் பேஸ் மாஸ்க் : ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கரித்தூள் கலந்து பிசையவும். இதை அப்படியே கிளாஸ் பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரையிலும் பயன்படுத்தலாம். தேவைப்படும் சமயத்தில் எடுத்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.