தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. அதை மறைக்க, நாம் ஹேர் டை பயன்படுத்துவோம். ஆனால், அதில் உள்ள கெமிக்கல் உடலுக்கு பல்வேறு தீமைகளை விளைவிக்கும் என்றாலும், வேறு வழி இல்லாமல் நாம் அதை உபயோகிக்கத்தான் செய்கிறோம். ஆனால், டைக்கு மாற்றாய் சில இயற்கையான பொருட்களை கொண்டு உங்கள் நரை முடியை வெள்ளையாக மாற்றலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. வீட்டிலேயே எப்படி இயற்கையான பொருட்களை கொண்டு டை தயாரிக்கலாம் என பார்க்கலாம்.
காபி பவுடர் ஹேர் மாஸ்க் : அரை கப் ப்ரூ காபியுடன், ஒரு கப் கண்டிஷனர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த கலவையை உங்கள் தலையில் அப்ளை செய்து ஷவர் கேப் பயன்படுத்தி உங்கள் தலையை மூடி வைக்கவும். பின்னர், வெது வெதுப்பான நீரால் உங்கள் தலை முடியை சுத்தம் செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.