சென்ட் எனப்படும் வாசனை திரவியத்தை பயன்படுத்தும் ஆண்களை பெண்கள் சுற்றிச் சுற்றி வருவார்கள். வாசனை திரவியத்தை அடித்துக்கொண்டால் பெண்களை மயக்கலாம். எந்த ஒரு வாசனை திரவிய நிறுவனமும் இந்த முறையில் விளம்பரம் செய்யத் தவறுவதில்லை. இப்படி நிறைய நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களில், பெண்களை கவர்வது பேன்றே உருவாக்கி இருப்பார்கள்.
1. மல்லிகை: மணம் வீசும் மல்லிகை பூவை விரும்பாதவர்களும் உண்டோ?. மலர்கள் எப்போதுமே தனது நறுமணத்தை இனச்சேர்க்கைக்காக பயன்படுத்துகின்றன. மேலும் மலர்களின் கவர்ச்சிக்கு காரணமாக அவற்றின் நறுமணம் விளங்குகிறது. அப்படி மலர்களிலேயே அதிகம் மணம் வீசும் பூவான மல்லிகை வாசம் கொண்ட சென்ட், ஆண், பெண்ணுக்கு இடையே நெருக்கம் மற்றும் காதலை அதிகரிக்க கூடியது என கூறப்படுகிறது.
3. கஸ்தூரி: ‘மான் வயிற்றில் பிறக்க கூடிய மணம் வீசும் அரிதாரம்’ என கஸ்தூரியை 2000 ஆண்டுகளுக்கு முன்பே நான்மணிக்கடிகையில் நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நறுமணம் வீசும் பொருட்களில் முக்கியமான இது சில வகை தாவரங்கள் மூலமாகவும், செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது. கஸ்தூரி வாசம் கொண்ட வாசனை திரவியத்தை பயன்படுத்துவது காமம் மற்றும் ஆசையை அதிகரிக்க உதவுகிறது.
6. சந்தனம்: வாசனை திரவியங்கள் பற்றி பேசும் பட்டியலில் சந்தனத்திற்கு கட்டாயம் தனி இடம் உண்டு. மரவகையை சேர்ந்த இதன் கட்டைகளை கல்லில் தேய்ந்தால் அற்புதமான நறுமணத்துடன் கூடிய சாந்து கிடைக்கும். பண்டைய காலங்களில் சந்தனம் நறுமணத்திற்காகவும், அழகிற்காகவும் அரசு பரம்பரையைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. சந்தனத்தின் நறுமணம் கொண்ட வாசனை திரவியங்களை ஆண்கள் பயன்படுத்துவது அவர்கள் பெண்களை எளிதாக ஈர்க்க உதவுகிறது.