பெண்களுக்கு சரும பாதுகாப்பை மேம்படுத்த பல வழிகள் உண்டு. ஆனால், ஆண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வுகள் அந்த அளவிற்கு சென்று சேரவில்லை என்று கூறலாம். பொதுவாக ஆண்களுக்கும் பெண்களை போலவே சருமம் சார்ந்த பாதிப்புகள் பல உருவாகும். அதே போன்று தலை முடி, தாடி, மீசை இவற்றை குறித்த சந்தேகங்கள் அதிகம் ஏற்பட கூடும். இந்த பதிவில் தாடியை ட்ரிம்மிங் செய்யும்போது அவசியம் நினைவில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
எப்போது ட்ரிம் செய்யலாம்? தாடி அல்லது மீசையை ட்ரிம் செய்யும்போது சில விஷயங்களை தவறாது செய்தாக வேண்டும். ட்ரிம்மிங் செய்யும்போது அதன் அளவு மிக முக்கியம். எனவே 1 சென்ட்டி மீட்டருக்கு கீழ் தாடியை ட்ரிம் செய்யாதீர்கள். தோலுடன் மிக நெருக்கமாக ட்ரிம் செய்தால் அந்த அளவிற்கு சிறப்பான தோற்றத்தை தராது. மேலும் ட்ரிம் செய்ததற்கான பயனும் அதில் இருக்காது.
உதட்டு ஓரங்கள் : பெரும்பாலும், உதடுகளின் ஓரங்களில் மிகவும் சிறிய முடிகள் இருக்கும். இதை ட்ரிம் செய்வது சற்று கடினமான ஒன்று தான். என்றாலும், நீங்கள் அவற்றை சீரான முறையில் ட்ரிம் செய்யலாம். தாடியை ட்ரிம் செய்யும் போது, தாடி மற்றும் மீசையின் நீளம் மற்றும் தோற்றம் ஒரே மாதிரியாகவும், முக அமைப்பிற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் உதட்டு பகுதியில் ட்ரிம்மிங் செய்யும்போது கவனமாக செய்து கொள்ளுங்கள்.
தாடி முடி : தாடியை ட்ரிம் செய்யும் போது, உங்கள் மீசைக்கும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மீசை தாடியுடன் தெரியாவிட்டால், அது உங்கள் தோற்றத்தை கெடுத்துவிடும். எனவே தாடியை ட்ரிம் செய்யும் போது உங்கள் மீசையை மிகவும் சிறியதாக ஆக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தாடியை மிகவும் சிறிதாக ட்ரிம் செய்தால் மோசமான தோற்றம் கிடைத்து விடும். எனவே ட்ரிம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் பார்த்து செய்தல் வேண்டும்.
சுத்தம் செய்தல் : பெரும்பாலும் நீங்கள் விழும்போதோ அல்லது எதையாவது சாப்பிடும்போதோ தாடிக்குள் அழுக்கு சேர்ந்து விடும். சில சமயங்களில், சாப்பிடும் போது தாடியில் உணவுத் துகள்கள் அதிகம் சேரும். எனவே நீங்கள் உங்கள் தாடியை அடிக்கடி கழுவ வேண்டும். இல்லையென்றால் உங்கள் தாடி முடியில் அழுக்குகள் சேர்ந்து வறண்டு போய் விடும். அதே போன்று நீங்கள் தாடி சுத்தம் செய்வதற்கு பயன்படுத்த கூடிய புராடக்ட்களையும் பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக அதிக கெமிக்கல் உள்ள புராடக்ட்களை பயன்படுத்த வேண்டாம்.