நீங்கள் சமீபத்தில் 30-வது பிறந்தநாளை கொண்டாடியவரா அல்லது விரைவில் கொண்டாட போகிறீர்களா. நீங்கள் 30-களில் நுழைவதை எப்படி உணர்கிறீர்கள்.. ஏனென்றால் பெரும்பாலும் 20-களில் இருந்து 30-ல் அடி எடுத்து வைப்பது சற்று கடினமானதாக தோன்றும். மேலும் 30-களில் சருமம் டல்லாக தோன்றுகிறது என்று பெரும்பாலான மக்கள் நிபுணர்களை நாடுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, வயது என்பது ஒரு எண் தான்..
உங்களுக்கு 30 வயது போலவே தெரியவில்லையே. உங்கள் வயதை விட நீங்கள் மிகவும் இளமையாகத் உள்ளீர்கள் என்று மற்றவர்கள் உங்களிடம் சொன்னால் நீங்கள் எப்படி உணருவீர்கள்..? மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், இல்லையா? ஆம் உங்கள் 30-களில் கூட நீங்கள் பிறரிடமிருந்து இது போன்ற பாராட்டுகளை கேட்கலாம். உங்கள் 30-களில் உங்களுக்குத் தேவைப்படும் ஆன்டி-ஏஜிங் ஸ்கின் கேர் பராமரிப்பு வழக்கத்தை இங்கே பார்க்கலாம்..
வைட்டமின் சி: வைட்டமின் சி சீரம்கள் அவற்றின் வயதான எதிர்ப்பு பண்புகளுக்கு (ஆன்டி-ஏஜிங்) புகழ் பெற்றவை. நீங்கள் முப்பது வயதை எட்டும் போது உங்கள் தோல் பராமரிப்பில் சேர்க்க வேண்டிய தயாரிப்புகளில் இதுவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் முகத்தை பிரகாசமாக்குவது முதல் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைப்பது வரை, கண்களுக்குக் கீழே உள்ள வட்டங்கள் குறைவது முதல் சருமத்தை ஈரப்பதமாக்குவது வரை, வைட்டமின் சி மூலம் ஏராளமான நன்மைகள் உங்கள் விரல் நுனியில் கிடைக்கும்.
ஆன்டி-ஏஜிங் ரெட்டினோல் சீரம் (Anti-Ageing Retinol Serum): ஆன்டி-ஏஜிங் ரெட்டினோல் சீரம் உங்கள் சருமத்திற்கு ஒரு மாயத்தை செய்ய கூடியவை. சருமத்திற்கு வயதாகும் அறிகுறிகளை எதிர்த்து போராட ரெட்டினோல் உதவுகிறது. சருமத்தின் மென்மை தன்மையை மேம்படுத்துகிறது. ரெட்டினோலின் பயன்பாடு சுருக்கங்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. பெரும்பாலான தோல் பராமரிப்பு நிபுணர்கள் ரெட்டினோல் முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறுகின்றனர்.
கண் ஜெல் (Eye Gel): நம் முகத்தின் மிகவும் சென்சிட்டிவ் வாய்ந்த பகுதி மற்றும் மிகவும் அழகான பகுதி கண்கள். கண்களுக்குக் கீழே உள்ள தோல் மிகவும் சென்சிட்டிவ் வாய்ந்ததாக இருப்பதால், முதுமை தோன்றத் தொடங்கும் முதல் இடம் கண்கள் ஆகும். எனவே கூடுதல் கவனிப்பு தேவை. எனவே ஐ ஜெல் அல்லது ஒரு ஐ கிரீம் அவசியம். உங்கள் இரவு நேர தோல் பராமரிப்பு வழக்கத்தில் உங்கள் கண்களுக்கு கூடுதல் பராமரிப்பு என்று ஏதாவது இருக்க வேண்டும். வழக்கமான மாய்ஸ்சரைசிங் வேலை செய்யாது.
சன்ஸ்கிரீன்: நீங்கள் வெளியே குறைந்த நேரம் சென்றால் கூட சன்ஸ்கிரீனை பயன்படுத்த மறக்காதீர்கள். வெளியே தெரியும் உங்கள் தோலின் அனைத்து பகுதிகளுக்கும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். ஒரு Broad Spectrum SPF உங்கள் சருமத்தை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது, மேலும் இது உங்கள் சருமம் நீண்ட காலத்திற்கு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.