முகப்பு » புகைப்பட செய்தி » பெர்ஃபியூமின் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

பெர்ஃபியூமின் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

பலரும் பெர்பியூம் பாட்டிலை பயன்படுத்தும் முன்பு குலுக்கிவிட்டு பயன்படுத்துவார்கள். அடிக்கடி சென்ட் பாட்டிலை அவ்வாறு குலுக்கினால், அதன் அடர்த்தியான நறுமணம் மற்றும் ‘பொடன்ஸி’ குறைந்துவிடும்.

 • 16

  பெர்ஃபியூமின் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

  பாடி ஸ்ப்ரே, சென்ட், பெர்ஃபியூம் என்று எது பயன்படுத்தினாலும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் வாசனை திரவியம், இனிமையான நறுமணம் கொண்டதாக மட்டுமல்லாமல், சரியான அளவில் பயன்படுத்துவதும் அவசியம். நீண்ட நேரம் பெர்பியூம் வாசனை இருக்க வேண்டும் என்ற காரணத்தால், பெர்பியூமை உடல் முழுவதும் ஸ்ப்ரே செய்து கொள்வதும் தவறு. எந்த பெர்பியூம் பயன்படுத்தினாலும் அது நீண்ட நேரம் இருப்பதற்கான டிப்ஸ் இங்கே.

  MORE
  GALLERIES

 • 26

  பெர்ஃபியூமின் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

  குளித்த பின்பு கொஞ்சம் ஈரப்பதமாக இருக்கும் போது ஸ்ப்ரே செய்யுங்கள் : ஸ்ப்ரே செய்யும் பெர்பியூமை நீங்கள் பயன்படுத்தினால், குளித்த பின்பு, உடலில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும் போது பயன்படுத்தலாம். ஆனால் ஈரமான உடலில் ஸ்ப்ரே செய்யக் கூடாது. இவ்வாறு நீங்கள் பெர்பியூமை பயன்படுத்தினால், பாடி லோஷன் அல்லது மாய்ஸ்சரைசரை விட சிறப்பாக செயல்படும். இதுவே, பெர்பியூமின் நறுமணத்தை லாக் செய்யும்.

  MORE
  GALLERIES

 • 36

  பெர்ஃபியூமின் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

  பல்ஸ் பாயின்ட்களில் அப்ளை செய்யவும் : உடலில் ஒரு சில இடங்களில் பெர்பியூம் ஸ்ப்ரே செய்வது முக்கியம். கை முட்டி, கழுத்தின் பக்கவாட்டுப் பகுதிகள், மணிக்கட்டின் உட்புறம், கிலாவிக்கில், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் கொஞ்சமாக ஸ்ப்ரே செய்தால் போதும். இவை எல்லாம் பல்ஸ் பாயின்ட்ஸ் என்று கூறப்படும். இந்தப் புள்ளிகளில் உள்ள வெப்பம், உடல் முழுவதும் நறுமணத்தை பரப்பும், நீண்ட நேரம் வாசனை குறையாமல் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  பெர்ஃபியூமின் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

  பெர்ஃபியூமை இப்படித் தான் ஸ்டோர் செய்ய வேண்டும் : ஒரு சில பொருட்களை அதனுடைய ஒரிஜினல் பேக்கேஜில் வைக்குமாறு, சூரிய ஒளி படாமல் இருக்க வேண்டும் என்று பலவிதமான குறிப்புகள் உள்ளன. அதன் பேக்கேஜிங்கிலேயே இத்தகைய விவரங்கள் இருக்கும். அது போலத்தான் பெர்பியூமை நீங்கள் நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல், வெப்பம் ஆகாத இடத்தில், குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தும் போது நீண்ட நேரத்திற்கு வாசனை குறையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 56

  பெர்ஃபியூமின் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

  பெர்ஃபியூம் பாட்டிலை எப்படி பயன்படுத்துகிறீர்கள்? பலரும் பெர்பியூம் பாட்டிலை பயன்படுத்தும் முன்பு குலுக்கிவிட்டு பயன்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் அடிக்கடி அவ்வாறு செய்கிறீர்களா என்பதை பார்க்க வேண்டும். அடிக்கடி சென்ட் பாட்டிலை அவ்வாறு குலுக்கினால், அதன் அடர்த்தியான நறுமணம் மற்றும் ‘பொடன்ஸி’ குறைந்துவிடும்.

  MORE
  GALLERIES

 • 66

  பெர்ஃபியூமின் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

  கூந்தலில்/தலை முடியில் கொஞ்சமாக ஸ்ப்ரே செய்யலாம் : எண்ணெய் பூசிய அல்லது மாய்ஸ்சரைசர் பூசப்பட்ட கூந்தலில் / தலை முடியில், கொஞ்சமாக பெர்பியூமை ஸ்ப்ரே செய்யலாம். இது நீங்கள் அப்ளை செய்த சென்ட்டின் நறுமணம் குறையாமல் நீண்ட நேரம் வைத்திருக்கும்.

  MORE
  GALLERIES