சரும அழகை பராமரிப்பதில் மற்ற நாட்டினரை விடவும் கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர் என்பது நாம் அறிந்தது தான். இருப்பினும் அவர்கள் எந்த மாதிரியான விஷயங்களை செய்து வருகின்றனர், எப்படி அவர்களால் மட்டும் இது சாத்தியம் ஆகிறது போன்ற விஷயங்களை பொரும்பாலும் நாம் அறிந்திருப்பது இல்லை. நாம் நினைப்பதை விடவும் கொரிய நாட்டினர் பல்வேறு புதுமைகளை அழகியல் துறையில் செய்து வருகின்றனர். அவற்றினால் தான் அவர்களால் கண்ணாடி போன்ற மேனியை பெற முடிகிறது. இந்த 2022 ஆம் ஆண்டில் எப்படிப்பட்ட புதுமைகளை அவர்கள் கொண்டு வர போகிறார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஸ்லாக்கிங் :பல அழகியல் கலைஞர்கள் 2021 ஆம் ஆண்டில் இந்த ஸ்லாக்கிங் முறை பற்றி அதிக அளவில் சமூக ஊடகங்களில் பேசி வந்துள்ளனர். மேலும் இது அப்போதே அதிகம் வைரலான ஒரு அழகியல் முறையாகும். இந்த ஆண்டு மேலும் இந்த முறை புது பரிமாணம் பெறவுள்ளது. இந்த முறை அதிக விலை கொண்டது. உங்களின் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைக்க இது உதவுகிறது. மேலும் இது எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு ஏற்றது அல்ல. இது வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ஏற்ற முறையாகும்.
தாவர மூலப்பொருட்கள்: பொதுவாக கொரிய நாட்டினர் பயன்படுத்த கூடிய பல பொருட்களில் தாவரங்களில் இருந்து எடுக்கப்படட மூலப்பொருட்களை கொண்டு ப்ராடக்ட்களை தயாரிக்கின்றனர். அதே போன்று இந்த வருடம் அதிக அளவிலான இவற்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சிவப்பு வெங்காயம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்களில் இருந்து அதிகம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
எளிதான அழகு : சரும பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு வகையான விஷயங்களை செய்து வருவோம். ஆனால், இது போன்று இல்லாமல் மிக குறைந்த அழகியல் முயற்சிகளின் மூலம் சருமத்தை சிறப்பாக மாற்றும் வழியை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக கொரியன் அழகியல் துறையினர் கூறியுள்ளனர். இதனால் குறைவான நேரத்தில் நிறைவான முடிவுகளை பெற முடியும்.
ஆரோக்கியமான தோல் : கண்ணாடி போன்ற தோல் தோற்றத்தை உருவாக்குவதற்கு பதிலாக இதை தாண்டியும் வேறு சில புதுமைகளை இந்த 2022-இல் கொண்டு வர போவதாக சொல்கின்றனர். இதை குறித்து அந்நாட்டின் தலைசிறந்த அழகியல் நிபுணர்களின் கேட்டபோது, "கண்ணாடித் தோலை மறந்து விடுங்கள், புரோபோலிஸ் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் போன்ற ஊட்டமளிக்கும் மற்றும் பொலிவு தரக்கூடிய பொருட்கள் உள்ள புராடக்ட்களை பயன்படுத்தினால் சிறந்த அழகை பெறலாம்" என்று கூறியுள்ளனர்.