இப்படி உடலுக்கு பாதுகாப்பையும் நமக்கு அழகையும் தரக்கூடிய சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பலர் தவறிவிடுகிறோம். மிகவும் எளிமையான வழிமுறைகளை தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய சருமத்திற்கு இளமையான தோற்றத்தை அளிப்பதுடன் அதனை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும். அப்படி எந்தெந்த வழிகளில் நம் சருமத்தை பாதுகாக்கலாம் என்பதை பார்ப்போம்.
சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு : சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் நம்முடைய தோலின் மேற்பரப்பை வெகுவாக பாதிப்படையை செய்யக்கூடும். தோலில் சுருக்கங்கள், வயதான தோற்றம் சில சமயங்களில் தோல் புற்றுநோய் கூட இந்த புற ஊதா கதிர்கள் மூலம் ஏற்படும். எனவே நீங்கள் வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் நல்லது நீங்கள் வெயிலிலேயே நீண்ட நேரம் இருக்கும்படி இருந்தால் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.
தலையணைகள் கவனம் செலுத்துங்கள் : நீங்கள் தூங்கும் போது சாடின் வகை தலையணை உறைகளை பயன்படுத்துவதன் மூலம் தோலில் ஏற்படும் அதிகப்படியான ஸ்ட்ரெச்சிங் மார்க்குகள், மற்றும் தூங்கும் போது ஏற்படும் சுருக்கங்கள் ஆகியவை ஏற்படுவதை தவிர்க்கலாம். உங்களுக்கு முகப்பரு பிரச்சனை ஏற்கனவே இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு சுத்தமான தரமான தலையணை உறையை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
குளிக்கும் முறையில் கவனம் : நீங்கள் குளிப்பதற்கும் சில வித கட்டுப்பாடுகள் உள்ளன. பல மணி நேரம் தொடர்ந்து குளித்து கொண்டிருப்பதால் உங்கள் சருமம் ஆரோக்கியமானதாகவோ அல்லது சுத்தமானதாகவோ மாறிவிடாது. ஆரோக்கியமான சருமத்திற்கு 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலான குளியலே போதுமானது. எப்போதும் குளிக்கும் போது வெந்நீரில் குளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது கெமிக்கல்கள் குறைவான சோப்பை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக குளித்து முடித்த பின்பு மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே உடலை நன்றாக துடைத்து ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சரியான உணவு முறை : மேற்கூறிய எல்லாவற்றையும் விட நீங்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் தேவை. ஏனெனில் உங்கள் உணவில் இருந்து தான் சருமத்திற்கு தேவையான அத்தனை சத்துக்களும், வைட்டமின்களும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, எனவே ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள பழ வகைகளையும், பச்சை காய்கறிகளையும், தயிர் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும் : புகை பிடிக்கும் போது அது உங்கள் தோளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் ஆகியவற்றை பாதிப்படைய செய்கிறது. இவைதான் தோலில் சுருக்கம் வராமலும் தோலின் நீட்சித்தன்மைக்கும் காரணமானவை ஆகும். ஆனால் புகை பிடிப்பதன் மூலம் இவை இரண்டுமே பாதிப்படைவதால் உங்கள் சருமம் வயதான தோற்றத்துடனும் சுருக்கங்கள் நிறைந்தும் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் புகை பிடிப்பதன் மூலம் ரத்த நாளங்கள் சுருங்குவதால் தோலுக்கு சரியான அளவில் ஆக்சிஜன் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.