பெண்கள் தங்கள் சருமத்தை குழந்தைகளைப் போல பாதுகாக்கின்றனர். மறுபுறம், பெரும்பாலான ஆண்கள் முற்றிலும் எதிர்மாறாக தங்களின் சருமத்தை கையாளுகின்றனர். உடல் நலத்தை போல சரும நலனும் முக்கியம் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். பொதுவாக ஆண்கள் பலரும் தோல் பராமரிப்பை ஆடம்பரமாக கருதுகின்றனர். ஆனால், இன்றைய கால கட்டத்தில், ஆண்கள் தோல் பராமரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். மேலும் அவர்களின் சரும பராமரிப்பு பழக்கங்களும் மாறி வருகின்றன. இருப்பினும் சில தவறான சரும பராமரிப்பு முறைகளை ஆண்கள் பின்பற்றி வருவதால் அவர்களின் சருமம் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. இவற்றை பற்றி இனி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பது : பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாராந்திர பயணம், கால்பந்து விளையாட்டு, மதிய உணவு இடைவேளை போன்றவற்றின் போது சூரிய ஒளியில் தங்கள் உடல் படுமாறு சில மணி நேரம் செலவிடுவார்கள். மேலும் அவர்கள் அடிக்கடி சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறந்துவிடுகிறார்கள். எனவே இதனால் முன்கூட்டிய முதுமை, தோல் கருமை மற்றும் தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, ஆண்கள் வெளியே செல்வதற்கு முன் கவனமாக இருங்கள் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
அடிப்படை சுகாதாரம் என்னவென்று தெரியவில்லை : சுகாதாரத்தின் அடிப்படை விஷயங்கள் மிகவும் அவசியம். எனவே, வியர்க்கும்போது உங்கள் முகம் மற்றும் கழுத்தை கழுவுதல், ரேஸர் பிளேடு அல்லது கார்ட்ரிட்ஜ் மழுங்கினால் அதை உடனே மாற்றுதல் மற்றும் உங்கள் கைகளையும் தொலைபேசியையும் சுத்தமாக வைத்திருப்பது ஆகியவை சுகாதார அடிப்படைகளில் அடங்கும். இவை பாக்டீரியாவை எளிதில் கடத்தும் என்பதால் அடிப்படை சுகாதாரத்தை பராமரிப்பது உங்கள் சருமத்தை தெளிவாகவும், புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
சரும வகையா அப்படின்னா என்ன ? பெரும்பாலான ஆண்கள் தங்கள் சருமம் இயல்பானதா, எண்ணெய் பசையுள்ளதா அல்லது இரண்டும் சேர்ந்ததா என்பதை அறியாமல் இருப்பார்கள். இந்த அறியாமை மோசமான சரும பராமரிப்பு புராடக்டுகளை தேர்வு செய்வதற்கு வழிவகுக்கிறது. இதனால், முதலில் உங்களின் தோல் வகை என்ன என்பதை அறியுங்கள். இதன் அடிப்படையில் உங்களுக்கு மிகவும் பொருத்தமான புராடக்டுகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.
சரும பராமரிப்பு முறையில் அலட்சியம் : பல ஆண்கள் சரியான புராடக்டுகளுடன் சரும பராமரிப்பு முறையை புறக்கணிக்கிறார்கள். இது சோம்பல் அல்லது அவர்களின் தோல் வகை பற்றிய அறியாமை காரணமாக இருக்கலாம். ஆரோக்கியமான மற்றும் இளமை தோற்றத்திற்கான ஒரு வழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் இதை மாற்ற முடியும். உதாரணமாக, உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் ஆயில் கண்ட்ரோல் ஃபேஸ் வாஷ் மற்றும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.
தாடி, மீசைக்கு கவனம் செலுத்தாமல் இருப்பது : ஆண்களுக்கு முகத்தில் உள்ள முடியிற்கு சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும். எனவே, முகத்தை கழுவும் போது, உங்கள் தோலை நன்கு சுத்தம் செய்ய முகத்தில் உள்ள முடிகளை கவனம் கொள்ள வேண்டும். உங்கள் முக முடியை ஈரப்பதமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சிறந்த தாடி அல்லது மீசை எண்ணெயைத் தேர்வு செய்யவும். மேலும், உங்கள் முகத்தின் முடியை டிரிம் செய்யதாலோ அல்லது ஷேவ் செய்தாலோ, உங்கள் தலைமுடியை சரியாக பார்த்து கொள்வது நல்லது.