மசாஜ்கள் என்பவை ஓய்வெடுப்பதற்கான ஒரு வழியாக மட்டுமல்லாமல் ஆரோக்கிய வாழ்க்கைக்கான திறவு கோலாகவும் இருக்கின்றன. அடிக்கடி மசாஜ் செய்வது சாத்தியமில்லை என்றாலும் 2 வாரங்களுக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்வது உடலையும், மனதையும் உற்சாகமாக வைக்க உதவும். மசாஜ் செய்ய நீங்கள் சென்றால் கீழ்காணும் இந்த 3 வகை மாசாஜ்களை கருத்தில் கொள்ளலாம்.
டீப் டிஷ்யூ மசாஜ் (Deep Tissue Massage) : ஸ்ட்ரெஸ் இருப்பவர்களுக்கு ஏற்து இந்த Deep Tissue Massage. இந்த வகை மசாஜ் தசைகளின் ஆழமான லேயர்கள் மற்றும் உங்கள் உடலில் இருந்து டென்ஷனை ரிலீஸ் செய்வதை நோக்கமாக கொண்டது. இந்த வகை மசாஜ் பொதுவாக மிகவும் சில ஸ்லோ, ஷார்ட் ஸ்ட்ரோக்ஸ் உள்ளிட்டவற்றின் கலவையாகும். தெரபிஸ்ட் உங்களுக்கு நிவரணம் தரும் பிரஷர் பாயின்ட்ஸ்களை கண்டறிந்து மசாஜ் செய்வார். உடலை குணப்படுத்துவதில் அதிசயங்களைச் செய்யும் ஒரு செயல்முறையாக இது இருக்கும். இந்த டைப் மசாஜ் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஸ்பாவில் இருக்கும் தெரபிஸ்ட் தனது விரல்கள், முழங்கை மற்றும் மணிக்கட்டுக்கு இடையில் உள்ள முன்கைகள் மற்றும் முழங்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு டீப் டிஷ்யூ மசாஜ் செய்வார்.
ஹாட் ஸ்டோன் மசாஜ் (Hot Stone Massage) : இந்த டைப் மசாஜில் ஸ்பாவில் உள்ள தெரபிஸ்ட் சுமார் 50 Basalt ஸ்டோன்களை 120-140º F வரை சூடாக்கி, பின் அவற்றை உங்கள் ஆயில் தடவப்பட்ட உடலில் வைத்து தேய்ப்பார். இந்த மசாஜ் உங்களை உடனடி ஆசுவாசப்படுத்தும் விளைவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்டோன்கள் உங்கள் வயிறு, முதுகு, கால் விரல்களுக்கு இடையில் வைக்கப்படுகின்றன. இவற்றில் சில கற்கள் உங்கள் உடலில் நிலையான் இடத்தில இருக்கும் போது சில கற்களை உங்களுக்கு மசாஜ் செய்ய தெரபிஸ்ட் பயன்படுத்துகிறார். எனினும் இந்த மசாஜில் பயன்படுத்தப்படும் கற்கள் அதிக சூடாக இல்லை மற்றும் சரியான வெப்பநிலை வரை சூடுபடுத்தப்படுகின்றன என்பதை தெரபிஸ்ட் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஸ்வீடிஷ் மசாஜ் (Swedish Massage) : ஸ்வீடிஷ் மசாஜ் என்பது லாங், நீடிங் ஸ்ட்ரோக்ஸ் (kneading strokes) மற்றும் மூட்டுகளின் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்தது. இந்த டைப் மசாஜ் தசைகளின் மேல் அடுக்கை குறிவைத்து அங்கிருக்கும் மசில் டென்ஷனை போக்குவதை நோக்கமாக கொண்டது. ஒரு தெரபிஸ்ட் ஆயில் தடவிய தோலின் மீது லாங் ஸ்ட்ரோக்ஸ் செய்வது மற்றும் தசை திசுக்களின் வெளிப்புற அடுக்குகளின் மீது கைகளை வைத்து பிசைகிறார். இது நீங்கள் ரிலாக்ஸாக உணர மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இந்த மசாஜ் செயல்முறை நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸாக வைக்க, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த மற்றும் உங்கள் உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவும். முதுகுவலி, தலைவலி, தசைப் பிரச்சனைகள் மற்றும் பிற நாட்பட்ட வலிகள் உள்ளிட்டவற்றை இந்த மசாஜ் மூலம் நிர்வகிக்கலாம்.