ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Hand Cream | குளிர்காலத்தில் இந்த 3 காரணங்களுக்காகவே கைகளில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம்!

Hand Cream | குளிர்காலத்தில் இந்த 3 காரணங்களுக்காகவே கைகளில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம்!

வயதாகும்போது அதன் பாதிப்பு நம் உடலின் மூன்று உறுப்புகளை சுற்றியுள்ள சருமத்தில் தான் முதலில் தெரிய ஆரம்பிக்கும். அவை கைகள், கழுத்து மற்றும் கண்களை சுற்றி உள்ள பகுதிகள் ஆகும்.

 • 16

  Hand Cream | குளிர்காலத்தில் இந்த 3 காரணங்களுக்காகவே கைகளில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம்!

  குளிர்காலங்களில் நமது உடலில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். அதிலும் பலருக்கும் வறட்சியான சருமம், வெண்புள்ளிகள் போன்ற சரும சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். உங்களால் இவை அனைத்தையும் மிக எளிதில் கடந்து விட்டு போக முடியாது. ஏனெனில் ஆரம்பத்தில் லேசாக ஆரம்பிக்கும் சில பாதிப்புகள் பின்னர் பெரிய அளவில் பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  Hand Cream | குளிர்காலத்தில் இந்த 3 காரணங்களுக்காகவே கைகளில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம்!

  அதிலும் முக்கியமாக குளிர்காலத்தில் நம்முடைய கைகளில் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கைகள் தான் நாம் நம் உடலில் அதிகம் பயன்படுத்தும் ஒரு உறுப்பு ஆகும். மேலும் கைகளில் கிருமி தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இவை தவிர சூரியனின் புற ஊதா கதிர்களினால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்புகளில் கைகளும் ஒன்று.

  MORE
  GALLERIES

 • 36

  Hand Cream | குளிர்காலத்தில் இந்த 3 காரணங்களுக்காகவே கைகளில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம்!

  இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நாம் வெளியே செல்லும்போது கைகளில் மாயசுரைசர் தடவிக் கொண்டு செல்லலாம். கைகளில் சரும வறட்சி ஏற்படுவதை தடுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை தடவிக் கொள்ளலாம். மேலும் ஹேண்ட் கிரீம்களையும் பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் ஹேண்ட் கிரீம்கள் பயன்படுத்துவதற்கான மூன்று முக்கிய காரணங்களை பற்றி இப்போது பார்போம்.

  MORE
  GALLERIES

 • 46

  Hand Cream | குளிர்காலத்தில் இந்த 3 காரணங்களுக்காகவே கைகளில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம்!

  பாதுகாப்பு : கைகளில் தடவப்படும் ஹேண்ட் கிரீம் ஆனது சரும நுண் துளைகளின் வழியாக வேதிப்பொருட்கள் கிரகிக்கப்படுவதை தடுக்கிறது. ஆனால் முழுவதுமாக இவற்றை தடுக்க முடியாவிட்டாலும், மாய்சுரைசர் பயன்படுத்தும் போது பாதுகாப்பு கிடைக்கும் சற்று நம்பிக்கையோடு இருக்க முடியும். இதன் காரணமாக நீண்ட நேரம் ஏதேனும் வேதிப்பொருட்களிலோ அல்லது வெந்நீரிலோ உங்கள் சருமம் தொடர்பில் இருக்கும் பட்சத்தில் அதன் பாதுகாப்பையாவது உறுதி செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  Hand Cream | குளிர்காலத்தில் இந்த 3 காரணங்களுக்காகவே கைகளில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம்!

  ஈரப்பதம் : கைகளில் உள்ள சருமத்திற்கு தேவையான அளவு ஈரப்பதம் இல்லையெனில் அவை அதிக அளவு வறட்சியாகவும், நிறம் மங்கியும் காணப்படும். இவை வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கும். மேலும் உங்களுக்கு எக்சிமா போன்ற சரும பிரச்சனைகள் ஏற்கனவே இருந்தால், இவை இன்னும் அதிக விளைவுகளை உண்டாக்கும். இதுவே நீங்கள் ஹேண்ட் கிரீம் பயன்படுத்தும்போது, அவை சருமத்தை இருப்பதுடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  Hand Cream | குளிர்காலத்தில் இந்த 3 காரணங்களுக்காகவே கைகளில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம்!

  இளமையான தோற்றம் : வயதாகும்போது அதன் பாதிப்பு நம் உடலின் மூன்று உறுப்புகளை சுற்றியுள்ள சருமத்தில் தான் முதலில் தெரிய ஆரம்பிக்கும். அவை கைகள், கழுத்து மற்றும் கண்களை சுற்றி உள்ள பகுதிகள் ஆகும். இந்த மூன்று பகுதிகளில் உள்ள சரும பகுதிகள் மிகவும் நுண் உணர்வு கொண்டவையாக இருப்பதே இதற்கு காரணம். எனவே நாம் எப்போதும் இந்தப் பகுதிகளை சுற்றியுள்ள சருமத்தை மாய்ஸ்சரைசர் கொண்டு ஈரப்பதத்துடன் வைத்திருப்பதன் மூலம் வயதான தோற்றம் உண்டாவதை தவிர்க்க முடியும். மேலும் வயதாவதால் உண்டாகும் சரும சுருக்கம் போன்ற பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.

  MORE
  GALLERIES