பல தசாப்தங்களாக, மக்கள் தங்கள் உள் மற்றும் வெளிப்புற ஆரோக்கியம் மற்றும் தோற்றங்களைப் பராமரிப்பது பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக வெளிப்புற அழகில் அதிக அக்கறை கொண்டவர்கள் தங்கள் முகம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். தலையில் பொடுகு சேர்வதை குறைப்பதற்கும், தலைமுடி உதிர்வதை தடுப்பதற்கும், அடர்த்தியை அதிகரிப்பதற்கும் பல தயாரிப்புகள், இயற்கை வைத்தியங்கள் ஆகியவற்றை மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் நீங்கள் உங்கள் கூந்தலை பராமரிக்கும் போது, நடக்கும் சில தவறுகள் உங்கள் கூந்தலின் வேர்களை சேதப்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?. கூந்தல் பராமரிப்பின் போது நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள் என்ன என்பதை அறிந்து அதை சரிசெய்துகொள்ளுங்கள். இதன் மூலம், உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், நறுமணமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க முடியும். அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.
1. ஷாம்பூவை உங்கள் உச்சந்தலையில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது : நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான தவறு இதுதான். ஒரு சில ஷாம்பூகளை உங்கள் உச்சந்தலையில் நேரடியாகப் பயன்படுத்தும்போது, அது உங்கள் தலைமுடியை பெரிதும் சேதப்படுத்தும். ஏனெனில் சில ஷாம்பூ வகைகள் தடிமனாக இருக்கும். அதனை நேரடியாகப் பயன்படுத்தினால், உங்கள் உச்சந்தலையில் சேதத்தை விளைவிக்கும்.
இது உலர்ந்த மற்றும் மந்தமான கூந்தலுக்கும், முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கும். எனவே ஷாம்பூவை நேரடியாக தலையில் தேய்க்காமல், ஒரு குவளையில், விரும்பிய அளவு ஷாம்பூவை கொட்டி அதனை தண்ணீரில் கலந்து, பின்னர் அந்த நீர்த்த கலவையை உங்கள் தலை முழுவதும் மெதுவாக தடவவும். ஷாம்பு மற்றும் நீர் கலவை உங்கள் தலைமுடியில் சமமாக பரவும், இப்படி செய்தால் உங்கள் தலைமுடிக்கு எந்த சேதமும் ஏற்படாது.
2. ஈரமான கூந்தலில் சிக்கெடுக்கக் கூடாது : உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு தலையை கோதுவதால் கடினமான சிக்கல்கள் ஏற்படாமல் அவற்றை எளிதாக பிரிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம், அது முற்றிலும் தவறு. உங்கள் மென்மையான மற்றும் ஈரமான கூந்தலை நீங்கள் சீப்பு கொண்டு தலைவாரும் போது, அது அதிகப்படியான மற்றும் கட்டாய முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
இது கிட்டத்தட்ட ஒரு கட்டத்திற்கு சுயமாக தூண்டப்படுகிறது. இதனால் அதிக முடிஉதிர்தல் பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே, தலைகுளித்தவுடன் உங்கள் கூந்தலை உலர்த்திய பிறகு, சீப்பு கொண்டு சிக்கெடுக்க வேண்டும். தலைமுடி காய்ந்தவுடன் முதலில் உங்கள் கூந்தலின் கீழ் பகுதியில் சிக்கல் எடுக்க வேண்டும் பின்னர் மேலே உள்ள சிக்கலை நீக்கலாம்.
3. உங்கள் தலைமுடியை உலர்த்த துண்டு பயன்படுத்தக்கூடாது : துண்டு உதவியுடன் தலையை உலர்த்தும் பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இது செயல்முறை முற்றிலும் தவறு. உங்கள் ஈரமான முடியை உடனடியாக ஒரு துண்டு கொண்டு கட்டி, பின்னர் தலைமுடியை அந்த துண்டின் மூலம் உலர்த்த டவல் ஜெர்கிங் நுட்பங்களைப் பயன்படுத்துவது முடி உலர்த்துவதற்கான மோசமான வழியாகும். அதற்கு பதிலாக, ஒரு பருத்தி அல்லது பட்டுச் துணியை பயன்படுத்தி, உங்கள் தலைமுடி முழுவதையும் கட்டிவிடுங்கள். பின்னர் அதனை அப்படியே 15 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். இந்த துணிகள் உங்கள் தலைமுடியை மென்மையாக்க உதவுவதோடு, முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகின்றன.