பொடுகு தொல்லை என்பது அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினையாக இன்று மாறிவிட்டது. இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோனோர் இந்த பொடுகு தொல்லையால் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். ஆரம்பத்தில் மிக சிறிதாக ஆரம்பிக்கும் இந்த பொடுகு, அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தலை முழுவதும் பரவி, பிரச்சனையை உண்டாக்கும். மேலும் தலையிலிருந்து செதில் செதிலாக உத்திர ஆரம்பிக்கும். மேலும் இதனால் அரிப்பு, எரிச்சல், முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
இதைப் பற்றி தோல் மருத்துவர்கள் கூறுகையில், இது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான். தினமும் தலையில் உள்ள அதிகப்படியான திசுக்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். முக்கியமாக வெயில் காலங்களில் ஏற்படும் அதிக வியர்வையின் காரணமாகவும், மழை காலங்களில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தினாலும் அவை மிகுந்த தொல்லையை உண்டாக்கும்.
குளிர்காலங்களில் சரும வறட்சி அதிகமாக இருக்கும் நேரத்தில் பொடுகு தொல்லை மிகவும் அதிகரித்து நமக்கு தொல்லையை கொடுக்கிறது. பொடுகு தொல்லையில் உள்ள முக்கிய பிரச்சினையே நம்மால் முழுவதுமாக பொடுகில் இருந்து விடுபட முடியாது. ஆனால் சில முறைகளை பயன்படுத்தி வீட்டில் இருந்தே பொடுகினால் ஏற்படும் பாதிப்புகளை சற்று குறைக்க முடியும்.
வேம்பு : பொடுகுடன் போராடுவதில் வேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. தலையில் உள்ள பூஞ்சை தொற்றுகளையும், பொடுகையும் நீக்குவது மட்டுமல்லாமல், தலை முடி வளரும் சருமத்தில் உள்ள நுண்துளைகளில் உள்ள மாசுகளை நீக்கி ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. சிறிதளவு வேப்பிலையை நன்றாக அரைத்து, தலையில் தடவி பின் சிறிது நேரம் கழித்து மிதமான சூடு உடைய நீரில் கழுவ வேண்டும்.
நெல்லிக்காய் பொடி மற்றும் யோகர்ட் : நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த நெல்லிக்காய் பொடியானது பொடுகு தொல்லைக்கு மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு விதத்தில் யோகர்டில் உள்ள ஈஸ்ட் நம் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வரிசையில் அடங்குகிறது. இவை இரண்டும் சேர்ந்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும், பொடுகு தொல்லையிலிருந்து விடுபடுவதற்கும் உதவுகின்றன.