முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

நெய் உணவு மட்டும் அல்லாது ஒரு ஆயுர்வேத மருத்துவ பொருளாகும். இது காயங்கள், தீக்காயங்கள், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுகிறது.

  • 110

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    வெயில் மற்றும் சுற்றுப்புற மாசு காரணமாக அதிக பாதிக்கப்படும் உடல் பாகத்தில் முக்கியமானவை நம் பாதங்கள். பொதுவாக சரும கருத்து போவதை டானிங் என கூறுகிறோம். கைகள், பாதங்களில் கருமையை போக்க, பெண்கள் விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் வீட்டு வைத்தியம் மூலம், செலவில்லாமல் கை, பாதங்களின் பளபளப்பை மீட்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்கண்ட வழிகளில் டானிங்கை சரிசெய்து பளிச்சென்ற சருமத்தை பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 210

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    பாதங்களை வெந்நீரில் ஊறவைப்பது : ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் சிகைக்காய் பவுடர், 200 மில்லி பால் மற்றும் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைச் சேர்த்து கால்களை 15 முதல் 20 நிமிடம் வரை ஊற வைக்கவும். பால் சருமத்தை மிருதுவாக்கி இயற்கையாக கருமையை போக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 310

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    ஆயுர்வேத மாஸ்க் : 2 ஸ்பூன் திரிபலா சூரணம், மஞ்சள், கடலை மாவு ஆகியவற்றை ரோஸ் வாட்டருடன் கலந்து (pack) போன்ற பதத்தில் கருமை நிறமுள்ள கால் பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரை வைத்து ஒரு காட்டன் துணியில் துடைத்து எடுக்கவும். இதை செய்வதன் மூலம் பளிச் என்ற அழகிய கால்களை பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 410

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    காஃபி ஸ்க்ரப் : 2 ஸ்பூன் காபி பவுடருடன் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், அரை ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து அதனுடன் எலுமிச்சை பழச்சாறை பிழிந்துவிடவும். இதை பேக் போல கலந்து கால்களில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து காட்டன் துணியால் துடைத்து எடுக்கவும். எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பதால் பேக் அப்ளை செய்துவிட்டு நடப்பதை தவிர்க்கவும்.

    MORE
    GALLERIES

  • 510

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    நெய் : நெய் உணவு மட்டும் அல்லாது ஒரு ஆயுர்வேத மருத்துவ பொருளாகும். இது காயங்கள், தீக்காயங்கள், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுகிறது. படுக்க செல்வதற்கு முன் இதனை கால்களில் தடவி, கால்களுக்கு லேசான மசாஜ் செய்வது மூலம், கால்களுக்கு நல்ல ரிலாக்ஸ் கிடைப்பது மட்டுமல்லாமல், கால்களில் உள்ள கருமையை போக்கும்.

    MORE
    GALLERIES

  • 610

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    ஆரஞ்சு தோல் ஸ்க்ரப் : 1 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பேஸ்டுடன் ஒரு ஸ்பூன் கடல் உப்பை சேர்த்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கால்களின் சருமத்தில் ஸ்க்ரப் செய்யவும். இந்த வழிமுறை இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் இது சருமத்தை பிரகாசமாகவும், தெளிவாகவும் மாற்றுகிறது.

    MORE
    GALLERIES

  • 710

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    பப்பாளி ஸ்க்ரப் : ஒரு கப் பழுத்த பப்பாளியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரு கால்களிலும் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கால்களை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த வழிமுறையை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 810

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    நல்பமராதி தைலம் : நல்பமராதி என்பது பிகஸ் எனப்படும் அரச மர குடும்பங்களின் தண்டுப் பட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். இந்த பட்டைகள் பல சரும பிரச்சனைகள், நரம்பு கோளாறுகளை குணப்படுத்துவதில் சிறந்தது என்று கூறப்படுகிறது. இந்த எண்ணெயை தயாரிக்க பல்வேறு வகையான பிகஸ் மரங்களின் மரப்பட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தைலத்தை கால்களில் தடவி வருவதன் மூலம், கால்களில் உள்ள கருமை நிறத்தை போக்கி, பாதங்களில் உள்ள வெடிப்புகளையும் சரி செய்ய உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 910

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    வாழைப்பழ பேக் : ஒரு கப் வாழைப்பழ துண்டுகளுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பால் அல்லது பால் ஏடு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அந்த பேஸ்டை கால்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து துடைத்து எடுத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    MORE
    GALLERIES

  • 1010

    கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இந்த எளிய ஹோம் ரெமிடிஸ் டிரை பண்ணுங்க..!

    சன் ஸ்கிரீன் : சன்ஸ்கிரீன், சூரியனின் சில புற ஊதா கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. முக்கியமாக தோல் புற்றுநோயைத் தடுக்கிறது. எனவே மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டாலும், சன் ஸ்கிரீன் அப்ளை செய்து வருவதன் மூலம், சன் டேன் (sun tan) எனப்படும் கருமை நிறம் இல்லாமல் வெண்மையான மென்மையான சருமத்தை பராமரிக்க முடியும்.

    MORE
    GALLERIES