அவ்வபோது ஃபோனில் நம்மை படம் பிடித்து, அந்த ஃபோட்டோக்களை பகிர்ந்து கொள்வது சாதாரண நிகழ்வாக இருக்கிறது. ஆனால், சில சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை பகிர்ந்து கொள்ள கூடாது என்பதை நாம் உணருவதில்லை. பொதுவாக வார இறுதி நாட்களில் நீங்கள் கலந்து கொள்ளும் பார்டிகளில் எடுக்கப்படும் ஃபோட்டோக்களை அலுவலக குரூப்களில் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
அதேபோன்று சில படங்களை புரோபைல் பிக்சராக வைக்கக் கூடாது. புத்தகத்தின் தரத்தை அதன் அட்டைப் படத்தை வைத்து எடை போடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், டேட்டிங் ஆப்களில் சில ஃபோட்டோக்களை நாம் புரொபைல் பிக்சராக வைக்கும் போது, நல்ல நபர்கள் நம்மை புறக்கணித்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. எந்தெந்த ஃபோட்டோக்களை தவிர்க்க வேண்டும் என்ற பட்டியல் இதோ.
குரூப் ஃபோட்டோ : சின்னஞ்சிறிய விஷயம் தான் பெரிய குழப்பத்தை உண்டாக்கும். குரூப் ஃபோட்டோ ஒன்றை உங்கள் புரொபைல் ஃபோட்டோவாக நீங்கள் வைக்கும் போது, அதை பார்ப்பவர்கள் உங்களைச் சுற்றியிலும் பெரிய நட்பு வட்டம் இருப்பதாக அல்லது நீங்கள் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ நினைத்துக் கொள்வார்கள். கேமராவில் உங்கள் முகம் தெளிவாக தெரியும்படி ஃபோட்டோ எடுத்து புரொபைல் பிக்சராக வைக்கவும்.
ஜிம்களில் எடுத்த ஃபோட்டோ வேண்டாமே : சிக்ஸ் பேக், நல்ல பைசெப்ஸ் என்று ஜிம்முக்கு சென்ற உங்கள் உடல்வாகு கட்டுக்கோப்பாக இருக்கலாம். ஆனால், இதை உங்கள் புரொபைல் பிக்சராக வைக்கும் போது உங்கள் எதிர்கால பார்ட்னர் இதைப் பார்த்தவுடன், உங்களுடைய முழு தோற்றத்தையும் யூகித்து விடுவார். இதனால் பின்னாளில் சுவாரஸ்யம் இருக்காது.
மாஸ்க் அணிந்த ஃபோட்டோ : நீங்கள் உரிய பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என்று சமூகத்திற்கு தெரியப்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், இந்த வகை படங்களை புரொபைல் பிக்சராக வைத்து, அதை உங்கள் பார்ட்னர் பார்ப்பதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. அது மட்டுமல்லாமல், உங்கள் முகத்தின் வசீகரம் மற்றும் அழகான புன்சிரிப்பை இது மறைத்துவிடும்.