நாய் மனிதர்களின் மிகச்சிறந்த கம்பானியன்! செல்லப்பிராணிகள் வளர்ப்பது வெகு சிலருக்கு மட்டுமே பிடிக்காது. மனிதர்களை விட பல மடங்கு அன்பை, பாசத்தைத் தருவதோடு, பாதுகாப்பையும் நாய்கள் வழங்கும். அந்த வகையில், வயதானவர்கள், தங்களுக்கு துணையாக மட்டுமின்றி, பாதுகாப்புக்கும் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்கள். முதியவர்கள் நாய்கள் வளர்க்க விரும்பினால், பின்வரும் பிரீட்களில் இருந்து தேர்வு செய்யலாம்.
மால்டீஸ்(Maltese) : புஸுபுஸுசுவென்று இருக்கும் இந்த நாய் வகை, லாப் டாக்ஸ் என்று கூறப்படும், அதிகமாக கொஞ்சும், செல்லமாக வைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு வகையாகும். குட்டியாக இருக்கும் இந்த நாயின் அதிகபட்ச இடையே 5 கிலோ தான். ஈசியாக ஹேண்டில் செய்ய முடியும், நெருக்கமான செல்லப்பிராணியாக இருக்கும்.
பொமரேனியன் (pomeranian) : பலர் வீட்டில் ஒரு குட்டி பிரின்ஸ் போல ஜாலியாக வலம் வரும் மற்றொரு நாய் தான் இந்த புஸு புஸு பொமரேனியன். 3 முதல் 4 கிலோ தான் இருக்கும் இந்த கியூட்டான நாய் இனம் பலராலும் விரும்பப்படுகிறது. அதிகமாக பாசம் காட்டும் இந்த வகை, முதியவர்கள் குழந்தை போல வளர்க்க பொருத்தமாக இருக்கும்.